திருமணத்திற்கு பிறகு ஆனந்தி நடிக்கும் தமிழ் படம் | முடிவுக்கு வந்தது அநீதி | பிருத்விராஜ் படத் தலைப்பை மாற்ற வேண்டும்: இந்து அமைப்புகள் அக்ஷய்குமாருக்கு வேண்டுகோள் | யஷ் அடுத்த படம் 'கேஜிஎப் 3'யா ?, கன்னடப் படமா? | 100 மில்லியன் சொத்துக்களின் சொந்தக்காரர் ஐஸ்வர்யா ராய் | தனுஷ் நடித்துள்ள 'த கிரே மேன்' டிரைலர் இன்று வெளியீடு | ஒரே டைப் டிசைன்: பிரசாந்த் நீல் மீது விமர்சனம் | தொடர் ஹிட்டுகள், மீள்கிறதா தமிழ் சினிமா? | குஷி முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு | நீதிமன்ற உத்தரவு ; தியேட்டர்களில் நிறுத்தப்பட்ட சேகர் |
ஹிந்தித் திரையுலகின் ஆல் டைம் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று 'அமர் அக்பர் ஆண்டனி'. மன்மோகன் தேசாய் இயக்கத்தில் லட்சுமிகாந்த் பியாரிலால் இசையமைப்பில் வினோத் கண்ணா, அமிதாப்பச்சன், ரிஷி கபூர் மற்றும் பலர் நடித்து 1977ம் ஆண்டு வெளிவந்த படம் இது.
இப்படம் வெளிவந்து இன்றுடன் 43 ஆண்டுகளை நிறைவடைந்ததை முன்னிட்டு அமிதாப்பச்சன் படம் பற்றிய அவருடைய கருத்தொன்றைப் பகிர்ந்துள்ளார்.
அதில், “43 வருடங்கள், 'அமர் அக்பர் ஆண்டனி' படம் அந்த நாட்களில் 7 கோடியே 25 ரூபாய் வசூலித்தது. பணவீக்கத்தைக் கணக்கிட்டுப் பார்த்தால் அதன் வசூல் 'பாகுபலி 2' வசூலைவிட மிஞ்சியதாக இருக்கும்,” என அமிதாப் டுவீட் செய்துள்ளார்.
100 தியேட்டர்களில் 25 வாரங்களும், 50 தியேட்டர்களில் 50 வாரங்களும் ஓடிய மிகப் பெரிய வெற்றிப் படம் இது. மும்பையில் மட்டும் 25 தியேட்டர்களில் 25 வாரங்கள் ஓடிய படம். அப்படியான ஒரு ஓட்டம் இந்தக் காலத்தில் நடக்க வாய்ப்பேயில்லை.
சிறு வயதில் பிரிந்த சகோதரர்கள் மூன்று வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த குடும்பங்களில் வளர்வார்கள். அதனால் நடக்கும் சம்பவங்கள்தான் அப்படத்தின் கதை.
1977ல் வெளிவந்த படத்தின் அப்போதைய வசூலான 7.25 கோடி, 2017ல் வெளிவந்த 'பாகுபலி 2' படத்தின் 1500 கோடி வசூலுக்குச் சமம் என்று சொல்லாமல் சொல்கிறார் அமிதாப்பச்சன்.