Advertisement

சிறப்புச்செய்திகள்

என் மனைவி கர்ப்பமானால் நானே சொல்கிறேன் - ஆர்யா | கேரளாவில் யானையை கொன்றவருக்கு லிங்குசாமி வழங்கிய மானசீக தண்டனை | என்ன அவசரம் ; ரஜிஷாவை எரிச்சலூட்டிய விமான பயணிகள் | தென் ஆப்பிரிக்காவில் சிக்கி 3 மாதங்கள் கழித்து கேரளா திரும்பிய படக்குழு | வைரமுத்துவை வெளியேற்ற வேண்டும் ; சின்மயிக்கு ஆதரவாக சி.எஸ்.அமுதன் குரல் | ரூ.352 கோடி வசூலித்த டாப்ஸி படங்கள் | மும்பை தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் சோனுசூட் | தமிழில் பிசியானார் ஸ்மிருதி வெங்கட் | கொரோனா கால ரிலாக்ஸ்: இசை ஆல்பம் வெளியிடும் கவுதம் மேனன் | 10ந் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்பு: தயாரிப்பாளர் சங்கம் முடிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கொரோனாவால் வறுமை: டி.வி.நடிகர் தற்கொலை

18 மே, 2020 - 14:18 IST
எழுத்தின் அளவு:
Hindi-TV-actor-commits-suicide

பிரபல இந்தி தொலைக்காட்சி நடிகர் மன்மீத் கரவேல். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர் மும்மைபயில் தங்கி இருந்து இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். ஆதத் சே மஜ்பூர் மற்றும் குல்தீபக் உள்பட பல தொடர்களில் நடித்துள்ளார்.

மன்மீத்துக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தன் மனைவி ரவீந்திர கவுருடன் மும்பையில் உள்ள கார்கர் பகுதியில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் மன்மீத் க்ரேவல் மனைவியிடம் தங்கள் எதிர்காலம் குறித்து கண்ணீருடன் பேசிக் கொண்டிருந்து விட்டு படுக்கைக்கு சென்றிருக்கிறார். சற்று நேரத்தில் சத்தம் கேட்டு விழித்த அவரது மனைவி கணவன் தூக்கில் தொங்குவதை பார்த்து அலறி உள்ளார்.

அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலிசிடம் மன்மீத் கரவேலின் மனைவி கூறியிருப்பதாவது: என் கணவர் நடித்த தொடர்கள், வெப் தொடர்கள், விளம்பர படங்கள் கொரோனா வைரஸ் பிரச்சனையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அவர் கடந்த சில நாட்களாகவே மன அழுத்தத்தில் இருந்தார். அவருக்கு வரவேண்டிய சம்பளமும் வரவில்லை. இதனால் நகைகளை அடகு வைத்து வெளிநாட்டுக்கு சென்று வேலை பார்த்து குடும்பதை காப்பாற்ற முயற்சி செய்தார். ஆனால் அதுவும் கொரோனா பிரச்சனையால் முடியவில்லை.

வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை. கடன்காரர்கள் வேறு கடனை கேட்டு தொல்லை கொடுத்தார்கள். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கவலையில் இருந்தார். இப்படி செய்து எங்களை தவிக்க விட்டுச் சென்றுள்ளார் என்று கூறியுள்ளார். இந்தி சின்னத்திரை நட்சத்திரங்கள் மன்மீத் கரவேல் குடும்பத்துக்கு நிதி திரட்டி வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஓவியத்தின் மூலம் கொரோனா நிதி திரட்டும் சோனாக்ஷி சின்ஹாஓவியத்தின் மூலம் கொரோனா நிதி ... ஓடிடி தளங்களில் மேலும் சில பெரிய ஹிந்திப் படங்கள் ஓடிடி தளங்களில் மேலும் சில பெரிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Saravanan AE - Navi Mumbai,இந்தியா
18 மே, 2020 - 22:12 Report Abuse
Saravanan AE மிகவும் வருத்தம் அளிக்கும் செய்தி. ஆழ்ந்த அனுதாபங்கள். சில நிகழ்வுகள் பலரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிடுகிறது. தொலைக் காட்சி, விளம்பரத் துறைகளில் வாய்ப்புகள் ஓரளவுக்கு உண்டு. போட்டி மிக அதிகம். திறமையும் அதிர்ஷ்டமும் தேவை. அவர் இறந்த பிறகு உதவும் சகாக்கள் இருக்கும் போது உதவுவார்களா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in