'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' படத்தின் டீசர் வெளியானது! | 'டிஜே டில்லு 2' படத்தின் ரிலீஸ் தேதி இதோ! | திமுக ஸ்டிக்கர் ஒட்ட பார்க்கும் உதயநிதி: நடிகை கஸ்தூரி கடும் விமர்சனம் | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரபாஸ்! | குடும்பத்துடன் மலேசியாவுக்கு டூர் சென்ற ஐஸ்வர்யா ராஜேஷ்! | இளையராஜாவின் காலில் விழுந்து ஆசி பெற்ற அண்ணாமலை! | சுனைனாவின் ரெஜினா டிரைலர் வெளியானது! | தியேட்டர்களில் அனுமனுக்கு ஒரு 'சீட்' ஒதுக்கீடு: ஆதிபுருஷ் படக்குழு அறிவிப்பு | இந்தியன்-2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா?: ரகசியம் காக்கும் படக்குழு | அஜித்துக்கு வில்லனாகும் அர்ஜூன் தாஸ்? |
கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்களை கண்டறிய உதவும் 1,000 ஸ்மார்ட் வாட்ச்களை, நடிகர் அக்ஷய் குமார் மும்பை போலீசாருக்கு இலவசமாக அளித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு துவங்கியதில் இருந்தே பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் முதல் ஆளாக பல்வேறு அமைப்புகள், கூலித்தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார். பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி அளித்த அக்ஷய், மும்பை மாநகராட்சிக்கு மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.3 கோடி நிதியுதவி செய்தார்.
தனது வீட்டில் குடும்பத்தினருடன் தனிமைப்படுத்தி கொண்டுள்ள அக்ஷய், கொரோனாவுக்கு எதிராக போரில் முன்னணியில் இருக்கும் அனைத்து மருத்துவ பணியாளர்கள், போலீசார் உள்ளிட்டோருக்கு தலைவணங்குவதாக வீடியோ வெளியிட்டதுடன், ரசிகர்களும் மரியாதை செலுத்துமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக தற்போது மும்பை போலீசாருக்கு ஸ்மார்ட் வாட்ச்களை இலவசமாக அளித்துள்ளார். புதிய ஸ்மார்ட் வாட்ச் மூலம் போலீசார், ஒருவரின் ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, உறங்கும் நேரம், கலோரிகளை அறிய உதவுவதோடு, ஒருவரின் உடல் வெப்பநிலை நார்மலாக இருக்கிறதா, அதிகமாக இருக்கிறதா என்பதையும் அறிய உதவும். கொரோனாவுக்கு எதிராக போராடி வருபவர்களில், உலகளவில் சென்சார் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வாட்சுகள், அக்ஷய் மூலம் மும்பை போலீசாருக்கு மட்டுமே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.