Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பாலிவுட்டுக்கு சென்ற மற்றொரு தமிழ் இயக்குனர்

15 மே, 2020 - 15:43 IST
எழுத்தின் அளவு:
Radiopetty-director-goes-to-bollywood

2015ம் ஆண்டு வெளிவந்து பல விருதுகளை வென்ற படம் ரேடியோபெட்டி. இதனை சென்னையை சேர்ந்த ஹரி விஸ்வநாத் இயக்கி இருந்தார். தனிமைப்படுத்தப்பட்ட ஒரு முதியவருக்கும், ஒரு ரேடியோ பெட்டிக்குமான உறவைச் சொன்ன படம். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹரி வசந்த் இந்திப் படம் ஒன்றை இயக்குவதன் மூலம் பாலிவுட்டில் கால் பதித்திருக்கிறார்.

படத்தின் பெயர் பன்சூரி. விஷன் 3 குளோபல் என்ற நிறுவனம் தயாரிக்க, அனுராக் காஷ்யப், ரிதுபர்னா சென்குப்தா , அங்கன் மாலிக், உபேந்திர லிமாயி, மசூத் அக்தர், டேனிஷ் ஹுசைன், மேஹெர் மிஸ்திரி உள்பட பலர் நடித்திருகிறார்கள். போலந்து ஒளிப்பதிவாளர் ஸெகொர்ஸ் ஹார்ட்பீல் ஒளிப்பதி செய்திருக்கிறார். தெப்ஜ்யோதி மிஸ்ரா இசையத்துள்ளார். பணிகள் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது.

"ஒரு 8 வயது சிறுவன் தன்னில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்துக் கொண்டு அதுவாகவே மாற நினைக்கிறான். அந்த பெருமுயற்சியின் காரணமாக அவனது வாழ்க்கை பயணத்தில் அவன் சந்திக்கும் வெற்றி, தோல்விகள், மகிழ்வுகளும்-இகழ்வுகளும், அவனை எப்படி புரட்டி போடுகின்றன, இறுதியில் அவன் இலக்கை அடைந்தானா இல்லையா என்பதை பல்வேறு சுவராஸ்யங்களுடனும், எதிர்பாராத திருப்பங்களுடனும், சொல்லும் படம்" என்கிறார் இயக்குனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
என் பெயரை தவறாக பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை: சல்மான்கான்என் பெயரை தவறாக பயன்படுத்தினால் ... 1,000 ஸ்மார்ட் வாட்ச்களை இலவசமாக அளித்த அக்ஷய்..! 1,000 ஸ்மார்ட் வாட்ச்களை இலவசமாக அளித்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in