விஜய் - லோகேஷ் கனகராஜ் படத்திற்கு ‛லியோ' டைட்டில்: அக்.,19ல் ரிலீஸ் | ஓணம் கொண்டாட்டமாக வெளியாகிறது துல்கர் சல்மானின் 'கிங் ஆப் கோதா' | ஒரே நேரத்தில் இரண்டு மெகா இயக்குனர்களின் படங்களில் நடிக்கப் போகும் சூர்யா! | திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா! | விஜய் 67 படத்தில் நடிக்க 10 கோடி சம்பளம் வாங்கும் சஞ்சய் தத்! | சாகுந்தலம் படத்திற்காக 30 கிலோ எடை கொண்ட புடவை அணிந்து நடித்த சமந்தா! | சினிமாவை விட்டு விலகினாரா பாண்டிராஜ்?: விவசாயத்தில் தீவிரம் | நானாக பட்டம் போட்டுக் கொள்ள மாட்டேன்: ஆர்ஜே.பாலாஜி | தமிழில் உருவாகும் அபோகலிப்டிக் சயின்ஸ் பிக்சன் படம் | காளிகாம்பாள் கோவிலில் ஹன்சிகா வழிபாடு |
கடந்த சில நாட்களாக பாலிவுட்டில் ஒரு பரபரப்பு ஓடிக் கொண்டிருந்தது. அது என்னவென்றால் கொரோன ஊரடங்கு முடிந்ததும் சல்மான்கான் ஒரு படத்தை தயாரிக்க இருப்பதாகவும், அந்த படத்தில் முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்க இருப்பதாகவும். தற்போது அதற்கான நடிகர், நடிகைகளை தேர்வு செய்து வருவதாகவும் தகவல் பரவியது. சல்மான்கான் படத்தில் நடிக்கும் ஆர்வத்துடன் பலரு இதற்காக முயற்சி செய்தார்கள்.
இந்த நிலையில் இதனை மறுத்து சல்மான்கான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நானோ, சல்மான் கான் பிலிம்ஸ் சார்பாகவோ யாரும் எந்த விதமான நடிகர் தேர்வையும் நடத்தவில்லை. எங்கள் படங்களில் நடிக்கும் நடிகர்களைத் தேர்வு செய்ய யாரையும் நியமிக்கவில்லை. அப்படியான புரளிகளைத் தாங்கி வரும் எந்த விதமான மின்னஞ்சல்களையும், செய்திகளையும் நம்பாதீர்கள்.
சல்மான் கான் பிலிம்ஸ் பெயரையோ, என் பெயரையோ அனுமதியின்றித் தவறாகப் பயன்படுத்துபவர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும். எனது ரசிகர்கள் இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம், வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள் என தெரிவித்துள்ளார்.