Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஓடிடி-யில் அமிதாப் படம் நேரடி ரிலீஸ்

14 மே, 2020 - 18:36 IST
எழுத்தின் அளவு:
Amithabh-movie-to-be-release-in-OTT

கொரானோ ஊரடங்கு காலத்தில் 50 நாட்களுக்கும் மேலாக புதிய திரைப்படங்களின் வெளியீடு இல்லாமல் இருக்கிறது. படத்தை எடுத்து முடித்துள்ள பல தயாரிப்பாளர்களின் தியேட்டர்களின் திறப்புக்காக காத்திருக்கிறார்கள். மக்கள் தியேட்டர்களுக்குப் படையெடுத்து வரும் நாள் எப்போது என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. அதனால், ஓடிடி நிறுவனங்கள் புதிய படங்களை நேரடியாக ரிலீஸ் செய்ய பேச்சு வார்த்தைகளை நடத்த ஆரம்பித்தன. இதன் மூலம் அவர்கள் புதிய சந்தாதாரர்களைச் சேர்க்க முடியும்.

தமிழில் ஜோதிகா நடித்துள்ள 'பொன்மகள் வந்தாள்' படம் அப்படித்தான் வெளியாக உள்ளது. அந்த செய்திதான் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அதற்குள் 'ஆர்கே நகர்' படம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிவிட்டது.

ஹிந்தித் திரையுலகின் மூத்த நடிகரான அமிதாப்பச்சன், ஆயுஷ்மான் குரானா நடித்துள்ள 'குலாபோ சித்தாபோ' படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளார்கள். ஏப்ரல் 17ம் தேதி இந்தப் படம் தியேட்டர்களில் வெளியாக வேண்டும். ஆனால், ஊரடங்கு காரணமா நிலையற்ற சூழல் உள்ளதால் ஜுன் 12ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் இப்படம் வெளியாகப் போகிறது.

“1969ம் ஆண்டு திரையுலகத்திற்கு வந்தேன். இந்த 51 வருடங்களில் பல மாற்றங்களையும், பல சவால்களையும் பார்த்திருக்கிறேன். இதோ அடுத்த சவால். 'குலாபோ சித்தாபோ' ஜுன் 12ம் தேதியன்று அமேசான் பிரைம் தளத்தில் 200 நாடுகளுக்கும் மேல் வெளியாகிறது. அது ஒரு அற்புதம். மற்றுமொரு சவாலில் நானும் பங்காக இருப்பது பெருமைதான்,” என அமிதாப்பச்சன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியத் திரையுலகில் இது ஒரு பெரிய மாற்றத்தைக் கொடுக்கும் என திரையுலகில் உள்ள பலரும் கருதுகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சல்மான்கான் யு-டியூப் - 25 நாளில் 10 லட்சம் பாலோயர்கள்சல்மான்கான் யு-டியூப் - 25 நாளில் 10 ... என் பெயரை தவறாக பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை: சல்மான்கான் என் பெயரை தவறாக பயன்படுத்தினால் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in