விஜய் - லோகேஷ் கனகராஜ் படத்திற்கு ‛லியோ' டைட்டில்: அக்.,19ல் ரிலீஸ் | ஓணம் கொண்டாட்டமாக வெளியாகிறது துல்கர் சல்மானின் 'கிங் ஆப் கோதா' | ஒரே நேரத்தில் இரண்டு மெகா இயக்குனர்களின் படங்களில் நடிக்கப் போகும் சூர்யா! | திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா! | விஜய் 67 படத்தில் நடிக்க 10 கோடி சம்பளம் வாங்கும் சஞ்சய் தத்! | சாகுந்தலம் படத்திற்காக 30 கிலோ எடை கொண்ட புடவை அணிந்து நடித்த சமந்தா! | சினிமாவை விட்டு விலகினாரா பாண்டிராஜ்?: விவசாயத்தில் தீவிரம் | நானாக பட்டம் போட்டுக் கொள்ள மாட்டேன்: ஆர்ஜே.பாலாஜி | தமிழில் உருவாகும் அபோகலிப்டிக் சயின்ஸ் பிக்சன் படம் | காளிகாம்பாள் கோவிலில் ஹன்சிகா வழிபாடு |
மும்பை : கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரு பக்கம் இருக்க திரைப்பிரபலங்கள் மறைந்து வருவது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று ஹிந்தி நடிகர் இர்பான் கான் மறைந்த நிலையில் இன்று(ஏப்.,30) ஹிந்தியில் மூத்த நடிகர்களில் ஒருவரான ரிஷி கபூர்(67) காலமானார்.
புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ரிஷி கபூருக்கு திடீரென முச்சுதிணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் அவரது உயிர் பிரிந்தது.
மறைந்த பிரபல ஹிந்தி நடிகர் ராஜ் கபூரின் இரண்டாவது மகனான இவர், தந்தை நடிப்பில் வெளியான மேரே நாம் ஜோக்கர் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் பாபி என்ற படத்தில் நாயகனாக அறிமுகமானார். முதல்படமே பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது. இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்து சூப்பர் ஹிட்டாக அமைந்தது.
பாலிவுட்டின் ரொமான்ட்டிக் நாயகனாக வலம் வந்த இவர் 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். இவரது மகன் ரன்பீர் கபூர், இப்போது பாலிவுட்டில் முன்னணி இளம் நாயகனாக வலம் வருகிறார். இவரின் மறைவு பாலிவுட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.