Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கோதுமைக்குள் பணம் வைத்து மக்களுக்கு வழங்கினாரா அமீர்கான்?

28 ஏப், 2020 - 11:11 IST
எழுத்தின் அளவு:
Did-Aamirkhan-give-Rs.15000-to-people-with-wheat

கொரோனா வைரஸ் பாதிப்பால் பல தொழில்கள் முடங்கி உள்ளன. இதனால் பலர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இவர்களுக்கு பலரும் உதவி வருகின்றனர். ஹிந்தி திரையுலகில் உள்ள பிரபலங்கள் பலரும் நிதி உதவி, உணவு பொருட்களை வழங்குகின்றனர்.

இந்நிலையில் ஒரு டிரக் நிறைய கோதுமை மாவு பாக்கெட்டுகள் டில்லிக்கு சென்றுள்ளது. அங்கு வைத்து ஏழை மக்களுக்கு இதை விநியோகித்துள்ளனர். பலரும் வாங்க முன்வரவில்லை. ஆயினும் இது கூட கிடைக்காத பலர் வாங்கி சென்றுள்ளனர். வீட்டிற்கு சென்று கோதுமை மாவு பாக்கெட்டுகளை பிரித்து பார்த்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி. காரணம் அதனுள் ரூ.15 ஆயிரம் பணம் இருந்துள்ளது.

இதை வழங்கியது ஹிந்தி நடிகர் அமீர்கான் என தகவல் வெளியாகி உள்ளது. பொதுவாக தான் செய்யும் உதவிகளை வெளியே சொல்ல விரும்பாதவர் அமீர்கான். அதேப்போல் இதையும் சத்தமின்றி செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அமீர்கான் தரப்பில் உறுதி செய்யப்படவில்லை.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மனிதநேயத்தை கை கழுவி விடாதீர்: அமிதாப் உருக்கம்மனிதநேயத்தை கை கழுவி விடாதீர்: ... மும்பை போலீஸ் பவுண்டேஷனுக்கு அக்ஷய் குமார் 2 கோடி நிதியுதவி மும்பை போலீஸ் பவுண்டேஷனுக்கு அக்ஷய் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

yuganesan - chennai,இந்தியா
02 மே, 2020 - 11:43 Report Abuse
yuganesan நல்லார் ஒருவர் உளரேல் எல்லார்க்கும் பெய்யும் மழை
Rate this:
DUBAI- Sivagangai babu Kalyan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
01 மே, 2020 - 13:20 Report Abuse
DUBAI- Sivagangai babu Kalyan fake
Rate this:
vbs manian - hyderabad,இந்தியா
01 மே, 2020 - 12:39 Report Abuse
vbs manian அதிகம் அலட்டி கொள்ளாத தனி மனிதன்.சர்ச்சைகளில் பொதுவாக சிக்குவதில்லை. விருதுகளை ஒதுக்குபவர். ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒரு படம் . அது முத்தாக அமையும்.
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
29 ஏப், 2020 - 08:46 Report Abuse
skv srinivasankrishnaveni பலர் இப்படியேதான் தான் செய்யுமுதவிகளை பற்றி பீத்துவது இல்லீங்க நல்லது செய்துருக்கார் சேரவேண்டியவாளுக்கு போயிருக்கு இதுவே அரசின்மூலம் என்றால் 50%அரசியல்வியாதிகள் சுருட்டிருப்பானுக
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
29 ஏப், 2020 - 19:29Report Abuse
 Muruga Velநீங்க ஏதாவது உதவி செஞ்சீங்களா...
Rate this:
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன்தங்கள் கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன் அதெப்படி ஐம்பது சதவீதம் என்று பாதியாக குறைத்து சொல்லலாம்? அதெல்லாம் அந்தக் காலம் அடிப்படை தேவைகள் எல்லாம் கொடுத்துள்ளோம்னு அறிக்கை விடுவதோடு அப்படியே ஸ்வாகா...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in