பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
கொரானோ ஊரடங்கு காரணமாக டாக்டர்கள் நோயாளிகளை கண்ணும் கருத்துமாக காக்கிறார்கள் என்றால் ஊரை போலீசார் கண்ணும் கருத்துமாக காவல் காத்து வருகிறார்கள். நாடெங்கும் பல போலீசார் அவர்களது வீடுகளுக்குக் கூட போய் நேரத்தைச் செலவழிக்காமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பல சினிமா பிரபலங்கள் டாக்டர்களுக்கும், போலீசாருக்கும் தங்களால் ஆன உதவிகளைச் செய்து வருகிறார்கள். 'சென்னை எக்ஸ்பிரஸ்' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய ஹிந்தித் திரையுலகின் முன்னணி இயக்குனரான ரோகித் ஷெட்டி அவருடைய 8 ஓட்டல்களை போலீசாருக்காக வழங்கியிருக்கிறார்.
இது குறித்த தகவலை மும்பை போலீஸ் அவர்களது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டிருக்கிறது. “பணியில் இருக்கும் எங்களது காவலர்களுக்காக மும்பையில் உள்ள 8 ஓட்டல்களை வழங்கியிருக்கிறார் ரோகித் ஷெட்டி. போலீசார் ஓய்வெடுக்க, குளிக்க மற்றும் காலை உணவு, இரவு உணவு ஆகியவற்றையும் ஏற்பாடு செய்துள்ளார். எங்களுக்கு இப்படி உதவி செய்யும் அவரது நல்லெண்ணத்திற்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
தமிழ் சினிமாவில் தங்களை முன்னணி இயக்குனர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சிலர் இதுவரை அவர்களது தொழிலாளர்களுக்குக் கூட ஒரு லட்ச ரூபாய் கூட நன்கொடை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.