நண்பன் பட வெற்றியை கொண்டாடிய துல்கர் சல்மான் | உதவியாளருக்கு கொரோனா : தனிமைப்படுத்திக் கொண்ட பவன் கல்யாண் | மாநாடு சிம்புக்கு மைல்கல் - தயாரிப்பாளர் | பார்த்திபன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை | ரஜினி பற்றி சூரி கொடுத்த அண்ணாத்த அப்டேட் | மாலத்தீவுக்கு அடுத்த விசிட் நடிகை ஷ்ரத்தா கபூர் | வக்கீல்சாப் : பவன்கல்யாண் நடிப்பை பாராட்டிய மகேஷ்பாபு | விஜய் சேதுபதியை சந்தித்த துருவ் விக்ரம் | ரெண்டகம் படத்தில் இணைந்த ஜாக்கி ஷெராப் | அமெரிக்காவில் கர்ணன் படம் பார்த்த தனுஷ் |
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போது மக்கள் ஊரடங்கால் வீட்டில் அடைந்து கிடக்கிறார்கள். குடும்பத்தோடு இருந்தாலும் தனிமையின் வலி அவர்களுக்கு தெரிகிறது. இந்த நிலையில் நடிகை ஸ்ரத்தா கபூர் "தனிமையின் கொடுமை இப்போது தெரிகிறதா? மிருகங்களை தனிமையில் அடைத்து வைக்கிறீர்களே அவற்றுக்கும் இப்படித்தான் இருக்கும்" என்று கோபமாக ஒரு பதிவிட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள விலங்குகளின் படத்தையும் வெளியிட்டுள்ளார்.
தனது இன்ஸ்ட்ராகிராம் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: கோவிட்-19, உலகையே தனிமையில் இருக்கச் செய்துள்ள நேரத்தில், நாம் அனைவரும் மன அழுத்தம், பதற்றம் என தனிமையின் பாதிப்பை உணர்ந்துள்ளோம். மிருகங்களும் அதேபோன்ற உணர்ச்சிகளை உணரும்.
மனிதர்களாக, நாம் ஒரு சூழலை அனுபவிக்கும் வரை அதே சூழலில் இருக்கும் மற்றவர்களின் நிலையைப் புரிந்து கொள்ள மறுக்கிறோம். ஆனால் நாம் இப்போது சிறைப்படுத்தப்படுவது எப்படி இருக்கும் என்பதை உணர்ந்துவிட்டோம். அதை, இந்த பூமியை நாம் பங்கு போட்டுக் கொண்டிருக்கும் மற்ற உயிர்களிடத்திலும் காட்டுவோம்.
லட்சக்கணக்கான மிருகங்கள் அதன் வாழ்க்கை முழுவதும் தனிமையில் இருக்கின்றன. மனநலம் என்பது மனிதர்களுக்கானது மட்டுமல்ல. எந்த உயிரினமும் சிறைபட்டு வாழக்கூடாது. நாம் இந்த பூமியின் விருந்தினர்களே தவிர எஜமானர்கள் அல்ல.
இவ்வாறு ஸ்ரத்தா கபூர் தெரிவித்துள்ளார்.