முதல்வர் வெளியிட்ட எம் ஜி ஆர் பாடல் | 18ஆம் வருடத்தில் ஒக்கடு ; மகேஷ்பாபு மனைவி மீது தயாரிப்பாளர் வருத்தம் | விரைவில் சுரேஷ்கோபியின் ஒத்தக்கொம்பன் ஆரம்பம் | சோனு சூட்டின் ரொமான்ஸ் இசை ஆல்பம் வெளியானது | பிப்ரவரியில் அடுத்தடுத்து வெளியாகும் பார்வதியின் 2 படங்கள் | விஜய்சேதுபதியின் எழுத்தாளர் அவதாரம் | சொர்க்கத்தில் 1௦௦ நாட்கள் ; அமிதாப்பிற்கு புதிய பொறுப்பு | லூசிபர் தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா | விஜய்-65வது படத்திலும் வில்லனாகும் பிரபல ஹீரோ | நயன்தாரா பாணியில் செயல்பட்ட வனிதா விஜயகுமார் |
ஹிந்தி நடிகை மான்கி க்ரூ. டில்லியை சேர்ந்த மாடல் அழகியான இவர் தூம் மச்சா தூன் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து புகழ்பெற்றார். அதன் மூலமாக சினிமாவுக்கு வந்தார். தி கிரீட்ச் கேர்ள் ஒன் வோர்ல்ட் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார், அதன் பிறகு நோ ஒன் கில்டு ஜெசிகா, ஏ கொஸ்டின் மார்க், பிகே, கய் இன்தி ஸ்கை, உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது வெப்சீரிசில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். கடைசியாக அவர் நடித்த சீரிஸ் மேட் இன் ஹெவன்.
கொரோனா பிரச்சினை உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஒரு தயாரிப்பாளர் மீது பரபரப்பான மீடூ பாலியல் புகார் கூறியிருக்கிறார் மான்வி க்ரூ. இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது:
ஒரு பிரபலமான தயாரிப்பாளர் வெப் சீரிஸ் ஒன்றில் நடிப்பதற்காக என்னை போனில் அழைத்தார். போனிலேயே கதை சொன்னார். பிடித்திருந்தது நடிக்க ஒப்புக் கொண்டு எனது சம்பளத்தை சொன்னேன். ஆனால் அவர் நான் கேட்டதை விட 3 மடங்கு அதிகமாக தருவதாக சொன்னார். எனக்கு அதிர்ச்சி. அதேசமயம் எதற்கு கூடுதலாக சம்பளம் தருகிறீர்கள் என்று கேட்டேன்.
அதற்கு அவர் "இந்த சம்பளம் உங்கள் நடிப்புக்கு மட்டுமல்ல எல்லாவற்றுக்கும் சேர்த்து" என்றார். அவர் சொன்னதன் பொருள் எனக்கு புரிந்தது. இப்படி பேச உங்களுக்கு எவ்வளவு துணிச்சல், பெண் என்றால் அவ்வளவு கேவலமா, இனிமேல் இதுபற்றி பேசினால் போலீசில் புகார் அளிப்பேன் என்று கூறிவிட்டு போனை துண்டித்து விட்டேன் என்றார்.
அந்த நபரின் பெயரை மான்வி கூறவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.