Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்கின்றனரா ரன்பீர் கபூர் - ஆலியா பட்?

31 மார், 2020 - 15:40 IST
எழுத்தின் அளவு:
Did-Ranbir-kapoor---Alia-bhatt-in-live-relationship-life

நடிகை ஆலியா பட்டும், நடிகர் ரன்பீர் கபூரும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ ஆரம்பித்து விட்டதாக சமூக வலைதளங்கள் செய்தி பரவி உள்ளது. அதற்கு தோதாக, சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றையும் இணைத்து பதிவிட்டு செய்தி வெளியிடுகின்றனர்.

கடந்த 2018லிருந்து ஆலியா பட்டும், ரன்பீர் கபூரும் காதலித்து வருகின்றனர். இருவரும் ஒன்றாக ஒரு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். ஆனால், அவர்கள் இருவரையும் ஜோடியாக பொது இடங்களில் பார்க்க முடியாமல் இருந்தது.

தற்போது கொரோனா பாதிப்பால் இந்தியா முழுக்க சுய ஊரடங்கு அமலில் இருக்கிறது. படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, அனைத்து சினிமா பிரபலங்களும் வீட்டுக்குள்ளேயே இருக்கின்றனர். சிலர் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் நேரலை, புகைப்படங்கள், வீடியோக்கள் எனப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த சுய ஊரடங்கால் ரன்பீரும், ஆலியாவும் கூட வீட்டில் தான் இருக்கின்றனர். ஒரு அபார்ட்மென்டுக்குள் இவர்கள் இருவரும் உடற்பயிற்சி செய்வதற்கான உடைகளில் இருக்க, ரன்பீர் வளர்ப்பு நாயுடன் உலா வரும் வீடியோ ஒன்று, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால்தான் இருவரும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ ஆரம்பித்து விட்டார்களா என்ற யூகச் செய்தி றெக்கை கட்டி பறக்கிறது.

இருவருக்கும் தனித்தனியாக வீடுகள் இருந்தாலும் அவர்கள் ஒன்றாக இருக்கும் இடம் யாருடைய வீடு என்பது தெளிவாகவில்லை. மேலும், சமீபத்தில் ஆலியா பட் தனது செல்லப் பிராணியையும், ரன்பீர் வளர்க்கும் செல்லப் பிராணியையும் புகைப்படம் எடுத்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதெல்லாம் சேர்த்தே, ஒரே வீட்டில் ரன்பீரும், ஆலியா பட்டும் வாழ்வதாக செய்தி பரப்பட்டு வருகிறது. திருமணம் செய்து கொள்ளாமல் இருவரும் லிவிங் டு கெதர் வாழ்க்கை நடத்தி வருவதை இதெல்லாம் ஊர்ஜிதம் செய்வதாகவும் செய்திகள் பரப்புகின்றனர்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பாலின சமத்துவம் வேண்டும்: பிரியங்கா சோப்ரா கனவுபாலின சமத்துவம் வேண்டும்: பிரியங்கா ... வேண்டுகோள்! வேண்டுகோள்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Endrum Indian - Kolkata,இந்தியா
02 ஏப், 2020 - 16:59 Report Abuse
Endrum Indian சினிமா தொழில் செய்பவர்கள் இவர்கள் ஆகவே இதில் ஒன்றும் தவறேயில்லை
Rate this:
அருணாசலம், சென்னை மீண்டும் மீண்டும் முக்கிய செய்திகள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in