Advertisement

சிறப்புச்செய்திகள்

என் மனைவி கர்ப்பமானால் நானே சொல்கிறேன் - ஆர்யா | கேரளாவில் யானையை கொன்றவருக்கு லிங்குசாமி வழங்கிய மானசீக தண்டனை | என்ன அவசரம் ; ரஜிஷாவை எரிச்சலூட்டிய விமான பயணிகள் | தென் ஆப்பிரிக்காவில் சிக்கி 3 மாதங்கள் கழித்து கேரளா திரும்பிய படக்குழு | வைரமுத்துவை வெளியேற்ற வேண்டும் ; சின்மயிக்கு ஆதரவாக சி.எஸ்.அமுதன் குரல் | ரூ.352 கோடி வசூலித்த டாப்ஸி படங்கள் | மும்பை தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் சோனுசூட் | தமிழில் பிசியானார் ஸ்மிருதி வெங்கட் | கொரோனா கால ரிலாக்ஸ்: இசை ஆல்பம் வெளியிடும் கவுதம் மேனன் | 10ந் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்பு: தயாரிப்பாளர் சங்கம் முடிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பாலின சமத்துவம் வேண்டும்: பிரியங்கா சோப்ரா கனவு

31 மார், 2020 - 14:10 IST
எழுத்தின் அளவு:
Priyanka-chopra-dreams-equality

பிரபல இயக்குநர் ராபர்ட் ராட்ரிகஸ் இயக்கத்தில், வி கேன் பி ஹீரோஸ் என்ற திரைப்படத்தில் பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார். ஏலியன்களால் கடத்தப்பட்ட தங்களின் பெற்றோர்களை, அவர்களின் குழந்தைகள் மீட்கும் கதை இது. இந்தப் படம் குறித்தும், சண்டைக் காட்சிகள் நடிக்க தனக்கு ரொம்பவும் பிடிக்கும் என்பது குறித்தும், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பிரியங்கா கூறியிருக்கிறார்.

அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: வி கேன் பி ஹீரோஸ் படமும், ஸ்பை கிட்ஸ் போலக் குழந்தைகள் நடிக்கும் சூப்பர் ஹீரோ படம்தான். படு சுவாரஸ்யமாக படமாக்கப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட சாகசங்கள் நிறைந்த படங்களில் நடிப்பது ரொம்பவும் பிடித்திருக்கிறது. சண்டைக் காட்சிகளில் நடிக்க ரொம்பவும் பிடிக்கும் என்பதால், அந்தக் காட்சிகளை நானே வடிவமைக்கிறேன். என்னுடைய உடலையும், அதன் திறன் மற்றும் வலிமையை நான் அதிகம் நம்புகிறேன். எனக்கு ஆக்ஷன் காட்சிகளில் அடிப்பது அதிகம் பிடிக்கும் என்பதாலேயே, குவாண்டிகோ உள்ளிட்ட படங்களில், குறிப்பாக சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளேன். தொடர்ந்து, அதே போன்ற படங்களில் நடிக்க விரும்புகிறேன்.

பாலின சமத்துவம் அமைய வேண்டும் என்பதிலும் விருப்பமாக இருப்பவர் நான். பெண்ணை மையப்படுத்திய படம், பெண் இயக்குநர் இயக்கும் படம் என்றெல்லாம் வார்த்தைகளைப் பயன்படுத்தி, விளம்பரப்படுத்துவது பேசுவதை ஒருபோதும் நான் விரும்புவதில்லை. அப்படி பயன்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. பாலின சமத்துவத்தோடு, எல்லாவற்றையும் அணுகும் நிலை விரைவில் வரும் என நம்புகிறேன்.

பெண்களாக இருப்பவர்கள், ஆண்களை மையப்படுத்திய படம், அதனால் சென்று பார்க்கலாம் என்று ஒரு போதும் சொல்வதும் இல்லை; விரும்புவதும் கூட இல்லை. அப்படியிருக்கும்போது, பெண்களை மையப்படுத்தியப் படம் என்று மட்டும் சொல்வது ஏன்?

ஆனாலும், இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி, இந்தியப் பெண்கள் திரைப் படம் போன்ற வார்த்தைகள் சமூகத்தில் உலா வருகின்றன. இந்த வார்த்தைகள் என் குழந்தைகள் வளர்ந்து வரும் நிலையில், அதை பயன்படுத்தாத வர வேண்டும். இதுதான் என்னுடைய விருப்பம்.

பெண்கள் மெதுவாக தங்கள் கூட்டிலிருந்து வெளியே வர ஆரம்பித்து விட்டனர். அவர்கள் சொந்தக் கால்களில் நிற்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். அந்த விருப்பத்தை அவருடைய பெற்றோரும் நிறைவேற்ற உதவுகின்றனர். நானும் அதையெல்லாம் விரும்பக் காரணம், என்னுடைய எல்லா எண்ணங்களுக்கும் பெற்றோர் ஆதரவாகவும்; அணுசரனையாகவும் இருப்பதுதான்.

இவ்வாறு பிரியங்கா சோப்ரா கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மளிகை பொருட்களுக்கு லேபிள் ஒட்டும் தீபிகா படுகோனேமளிகை பொருட்களுக்கு லேபிள் ஒட்டும் ... லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்கின்றனரா ரன்பீர் கபூர் - ஆலியா பட்? லிவிங் டு கெதர் வாழ்க்கை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in