Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பழம்பெரும் நடிகை நிம்மி காலமானார்

27 மார், 2020 - 12:07 IST
எழுத்தின் அளவு:
Vetren-actress-Nimmi-Pasess-away

பழம்பெரும் இந்தி நடிகை நிம்மி. 1949ம் ஆண்டு பார்சாத் படத்தின் மூலம் அறிமுகமான இவர், அந்தாஷ், தீதர், ஆன், அமர், குந்தன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 87 வயதான நிம்மி முதுமை காரணமாக சினிமாவை விட்டு விலகி மும்பையில் ஜுகு பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். அவரது கணவர் அலிராஜா 2007ம் ஆண்டில் மரணம் அடைந்திருந்தார். கணவர் அடக்கம் செய்யப்பட்ட ரெக்மாபாத் மயானத்தில் அவரது உடல் நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது.

கணவன் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே தன்னையும் அடக்கம் செய்ய வேண்டும் என்று ஏற்கெனவே நிம்மி கூறியிருந்ததால் அவரது ஆசையை குடும்பத்தினர் நிறைவேற்றினார்கள். நிம்மியின் மறைவுக்கு பாலிவுட் நடிகர்கள் தங்களது சமூக வலைத்தள பக்கதில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஆன்லைனில் அந்தாக் ஷரி!ஆன்லைனில் அந்தாக் ஷரி! 'பாலிவுட்' பக்கம் என்ன சத்தம்? உலக கோப்பை  இறுதி போட்டி 'திக் திக்' 'பாலிவுட்' பக்கம் என்ன சத்தம்? உலக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in