Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

நிர்வாணமாக நடித்ததை ரசிகர்கள் ஏற்கவில்லை: கரீனா கபூர்

09 மார், 2020 - 18:00 IST
எழுத்தின் அளவு:
Kareena-Kapoor-about-acted-as-nude-in-Heroine-film

பிரபலமான இந்தி நடிகை கரீனா கபூர். அவர் பல்வேறு கேரக்டர்களில் நடித்து அசத்தி இருக்கிறார். இருந்தாலும், சாவேலி மற்றும் ஹீரோயின் போன்ற படங்களில் அவர் ஆழமான கேரக்டர்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும், இந்தப் படங்களெல்லாம் பெரும் வெற்றி பெறவில்லை.

ஹீரோயின் படத்தில் அனுபமா சோப்ராவுடன் இணைந்து நடித்திருந்தார். இந்தப் படத்தை மாதுர் பண்டர்கர் இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் திரைக்கதைக்கு ஏற்றபடி, அவர் படத்தின் ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்திருந்தார். ஆனால், படம் ஓடவில்லை என்றதும், அந்தக் காட்சியை ரசிகர்கள் விரும்பவில்லை என, படத்தின் தோல்விக்கு காரணம் கூறி வருகிறார் கரீனா கபூர்.

இந்நிலையில், அவர் தன்னுடைய சினிமா வாழ்வில், தான் பெருமைப்படக் கூடிய வகையில் நடித்த கேரக்டர்கள் குறித்து பேசியிருக்கிறார். அதில் ஹீரோயின் படத்தில் நடித்த கேரக்டரைத்தான் அவர் பிரதானமாக குறிப்பிடுகிறார்.

அதைக் குறிப்பிட்டு,அவர் கூறியிருப்பதாவது: நிறைய கேரக்டர்களில் நான் நடித்திருக்கிறேன். இருந்தாலும், சில கேரக்டர்கள் தான் மனதுக்கு நிறைவைக் கொடுப்பதாக இருக்கும். அந்த வகையில் ஹீரோயின் படக் கேரக்டர் அழுத்தமானது; ஆழமானது. அதில் நடித்ததை நான் இன்றைக்கும் பெருமையாக நினைக்கிறேன். ஆனால், படம் தோல்வியைத் தழுவியது. இது எனக்கு பெருத்த வருத்தத்தைக் கொடுத்தது. இந்தப் படத்தில் நான் ஒரு காட்சியில் நிர்வாணமாக நடிக்க வேண்டும் என இயக்குநர் கூறினார். படத்தின் கதையோட்டத்துக்கு அந்த காட்சி முக்கியம் என்பதால் நடித்துக் கொடுத்தேன். சொல்லப் போனால், அவர்கள் எதிர்பார்த்ததை விட ஆயிரம் மடங்கு ஈடுபாட்டோடு, ஹீரோயின் படத்தில் நடித்துக் கொடுத்தேன். என்னுடைய துரதிருஷ்டம் அந்தப் படம் ஓடவில்லை. அதற்குக் காரணம் - அந்த நிர்வாண காட்சிதான். ரசிகர்கள், நான் நிர்வானமாக நடித்ததை விரும்பவில்லை; ஒப்புக் கொள்ளவும் இல்லை. நிர்வாண காட்சியைப் பார்த்து விட்டு துடித்துப் போனதாக பலரும் கூறினர்.

இவ்வாறு கரீனா கபூர் கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
'பாலிவுட்' பக்கம் என்ன சத்தம்?'பாலிவுட்' பக்கம் என்ன சத்தம்? ஞானி அமைரா! ஞானி அமைரா!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Endrum Indian - Kolkata,இந்தியா
11 மார், 2020 - 17:32 Report Abuse
Endrum Indian சினிமா தொழில் பண்ணுபவர்களின் தொழில் தர்மம் இது தானே, அதனால் தான் இந்த டொக்கு மூஞ்சியை யாரும் கண்டு கொள்ளவில்லை.
Rate this:
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
10 மார், 2020 - 17:42 Report Abuse
Nallavan Nallavan அடிக்கடி பாக்குறதுதானே -ன்னு நொந்து போயிருப்பானுவோ ..... திரும்பவும் முயற்சி பண்ணிப்பாரேன் .....
Rate this:
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
09 மார், 2020 - 23:37 Report Abuse
தாமரை செல்வன்-பழநி இவ்வளவு ஈடுபாட்டோட நடிச்ச உன்னைப்போயி இந்த ரசனை கெட்ட ரசிகர்கள் புரிந்துகொள்ளாமல் விட்டுவிட்டார்களே ...இந்த மாதிரி ஒரு நல்ல காட்சியை ரசிக்காமல் படத்தை தோல்வியுற வைத்த ரசிகர்களை வைத்துக்கொண்டு இந்த நாடு எப்படித்தான் முன்னேறுமோ ? இதெல்லாம் நினைத்தாலே கவலையாக உள்ளது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in