விவேக் மறைவு என்னை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தியது - இளையராஜா | மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்துவோம் - சிம்பு | பிக்பாஸ் வீட்டுக்கு ஒரு வாரம் லீவு போட்ட சுதீப் | ஆறு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மீரா ஜாஸ்மின் | சித்தார்த் பிறந்தநாளில் மகாசமுத்ரம் போஸ்டர் வெளியீடு | தமிழில் உருவாகும் மோசன் காமிக்ஸ் சூப்பர் ஹீரோ படம் | இறுதிக்கட்டத்தில் அதர்வா படம் | எம்.ஜி.ஆர் மகன்: தந்தை மகன் ஊடலை சொல்லும் படம்: பொன்ராம் | ஹிந்தி டிவி நடிகை பாருல் சவுத்ரி குடும்பம் கொரோனாவால் பாதிப்பு | விடைபெற்றார் விவேக் : அரசு மரியாதையுடன் உடல் தகனம் - மரக்கன்றுகள் ஏந்தி ரசிகர்கள் அஞ்சலி |
நடிகை ஷில்பா ஷெட்டியும், அவரது கணவரும், தங்க நகை திட்டம் தொடர்பான வர்த்தகத்தில், தன்னை ஏமாற்றி மோசடி செய்ததாக, வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர், மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார்.
பாலிவுட்டின் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி 44. தமிழில், மிஸ்டர் ரோமியோ, குஷி ஆகிய படங்களில் நடித்துள்ளார். ராஜ் குந்த்ரா என்ற தொழில் அதிபரை திருமணம் செய்த ஷில்பா, அதற்குப் பின் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.
இந்நிலையில், வெளிநாடு வாழ் இந்தியரான சச்சின் ஜோஷி, மும்பை போலீசில் அளித்துள்ள புகாரில் கூறியுள்ளதாவது: ஷில்பாவும், அவரது கணவரும், சத்யுக் கோல்டு என்ற தனியார் நிறுவனத்தை நடத்தி வந்தனர். கடந்த, 2014ல், இவர்களது நிறுவனத்தின் தங்க நகை திட்டத்தில் சேர்ந்து, 18.58 லட்சம் ரூபாய்க்கு தங்கம் வாங்க முதலீடு செய்தேன். திட்டத்தில் சேர்ந்ததும், கோல்டு கார்டு என்ற அட்டையை தந்தனர். ஐந்தாண்டுகள் முடிந்ததும், இந்த அட்டையை திரும்ப கொடுத்து, அதன் மதிப்பிற்கு தரமான தங்கத்தை பெறலாம் என அவர்கள் உறுதி அளித்திருந்தனர்.
இந்நிலையில், ஐந்தாண்டுகள் முடிந்ததும், அவர்களது நிறுவனத்துக்குச் சென்றேன். அந்த நிறுவனம் மூடப்பட்டிருந்தது. நான் ஏமாற்றப்பட்டதை அறிந்தேன். எனவே, என்னை ஏமாற்றிய ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு, அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.