இந்திய சினிமாவின் நாயகன் : மணிரத்னத்தை வாழ்த்திய கமல் | குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளையராஜா | கீர்த்தி சுரேஷிற்கு அழகு, அறிவு இரண்டுமே இருக்கிறது : கமல் | சார்பட்டா பரம்பரை 2 எப்போது துவங்கும்? | கார்த்தி படத்தில் இணைந்த அரவிந்த்சாமி | மீனவர் கதாபாத்திரத்தில் நாக சைதன்யா | எதிர்நீச்சல் தொடரில் முக்கிய ரோலில் என்ட்ரியாகும் திருச்செல்வம் | அன்பிற்காக மட்டுமே பக்கபலமாக நிற்பவர் விஜய் தேவரகொண்டா : சமந்தா நெகிழ்ச்சி | ஜெயிலர் காமெடி வேற மாதிரி இருக்கும் : யோகிபாபு வெளியிட்ட புது தகவல் | டெவில் படம் மூலம் இசையமைப்பாளரான மிஷ்கின் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு |
பாலிவுட்டின் பிரபல கூட்டணியான இயக்குனர் ரோஹித் ஷெட்டி, நடிகர் அக்ஷய் குமார் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் 'சூர்யவன்ஷி'.. இந்தப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த படத்தில் சிம்பா என்கிற கெஸ்ட் ரோலில் நடித்துள்ள நடிகர் ரன்வீர் சிங்கும் இந்த விழாவில் கலந்து கொண்டார்.. ஆனால் ரன்வீர் சிங் விழா துவங்கி சிறிது நேரம் கழித்து தாமதமாக வந்தார்.
எப்போதும் நேரம் தவறாமையை சரியாக கடைபிடித்து வரும் அக்ஷய் குமார் உடனே பள்ளிக்கூட வாத்தியாராக மாறி ரன்வீர் சிங்கை மேடையிலேயே தோப்புக்கரணம் போட வைத்து செல்லமாக தண்டனை கொடுத்தார்.. ரன்வீர் சிங் தோப்புக்கரணம் போடும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது