பெங்களூருவில் நடிகர் சித்தார்த்துக்கு எதிர்ப்பு: பாதியில் வெளியேறினார் | ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்ட சென்சார் போர்டு: நடிகர் விஷால் பரபரப்பு குற்றச்சாட்டு | ஹாரி பாட்டர் நடிகர் மைக்கேல் கேம்பன் காலமானார் | லியோ ஆடியோ விழா ரத்து- ஆதங்கத்தில் விஜய் ரசிகர்கள் வெளியிட்ட போஸ்டர்!! | சிம்பு 48வது படத்தில் இணையும் கேஜிஎப் இசையமைப்பாளர்! | விபத்தில் இறந்த ரசிகரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய சூர்யா! | சாயாவனம்: மலையாள இயக்குனரின் தமிழ் படம் | 'இறுகப்பற்று' படத்தால் பல வாய்ப்புகளை இழந்தேன்: அபர்ணதி | ‛சப்தம்' படப்பிடிப்பு நிறைவு | சின்னத்திரை தொடரில் நடிக்கிறார் சித்தார்த் |
கடந்த ஆண்டு மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளியாகி அருண் விஜய்க்கு மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது 'தடம்'. மாறுபட்ட இரண்டு வேடங்களில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் அருண் விஜய். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்திற்கு தெலுங்கிலும், இந்தியிலும் ரீமேக் உரிமைக்கு மிகப்பெரிய போட்டி ஏற்பட்டது. அந்த வகையில் தற்போது தெலுங்கில் ராம் பொத்தினேனி நடிக்க, கிஷோர் திருமலா என்பவர் இந்த படத்தை ரெட் என்கிற பெயரில் ரீமேக் செய்து இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு ஏப்ரலில் துவங்க இருக்கிறது.
இன்னொரு பக்கம் இந்த படத்தின் இந்தி ரீமேக்கில் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கவிருக்கிறார். அறிமுக இயக்குனரான வர்தன் கெட்கர் இயக்கும் இந்த படம், மே மாதம் துவங்க உள்ளது. தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டியை இந்தியில் கபீர்சிங் ஆக ரீமேக் செய்த தயாரிப்பாளர்கள் தான் இந்தப் படத்தையும் இந்தியில் தயாரிக்கிறார்கள்.