Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

நடிகை ரவீணாவை கைது செய்ய டி.ஜி.பி.,க்கு கடிதம்

19 பிப், 2020 - 13:10 IST
எழுத்தின் அளவு:
Letter-writter-for-DGP-to-arrest-Raveena-Tandon

பீட்: பாலிவுட் நடிகை ரவீணா டாண்டன், இயக்குனர் பாரா கான், நகைச்சுவை நடிகர் பார்தி சிங் ஆகியோரை கைது செய்ய, எஸ்.பி.,க்கு உத்தரவிடும்படி, மஹாராஷ்டிரா டி.ஜி.பி.,க்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பீட் நகரைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனத்தின் தலைவர் ஆஷிஸ் ஷிண்டே, மாநில டி.ஜி.பி.,க்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறி இருப்பதாவது:

பிரபல பாலிவுட் நடிகை ரவீணா டாண்டன், இயக்குனர் பாரா கான் மற்றும் நகைச்சுவை நடிகர் பார்தி சிங் ஆகியோர், ஒரு, டிவி நிகழ்ச்சியில், கிறிஸ்துவ மதத்திற்கு எதிரான கருத்துகளை தெரிவித்து, மத உணர்வுகளை புண்படுத்தினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கடந்த டிசம்பரில், சிவாஜி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. பின் அந்தப் புகார், ரவீணா டாண்டன் உள்ளிட்டோர் வசிக்கும் மும்பையின், மலாட் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டதாக தெரிவித்தனர். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை. ரவீணா டாண்டன் உள்ளிட்ட மூன்று பேரையும் கைது செய்ய, பீட் நகர எஸ்.பி.,க்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து, பீட் நகர் எஸ்.பி.ஹர்ஷ் பொட்டார் கூறும்போது, ரவீணா டாண்டன் மீதான புகார் இதுவரையிலும் என் பார்வைக்கு வரவில்லை; வந்த பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கிடைத்த கேப்பில் இந்தி படத்தை இயக்கி முடித்த பிரியதர்ஷன்கிடைத்த கேப்பில் இந்தி படத்தை ... ஐம்பதிலும் அசத்தும் ஜெனிபர்! ஐம்பதிலும் அசத்தும் ஜெனிபர்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in