விவேக் மறைவு என்னை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தியது - இளையராஜா | மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்துவோம் - சிம்பு | பிக்பாஸ் வீட்டுக்கு ஒரு வாரம் லீவு போட்ட சுதீப் | ஆறு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மீரா ஜாஸ்மின் | சித்தார்த் பிறந்தநாளில் மகாசமுத்ரம் போஸ்டர் வெளியீடு | தமிழில் உருவாகும் மோசன் காமிக்ஸ் சூப்பர் ஹீரோ படம் | இறுதிக்கட்டத்தில் அதர்வா படம் | எம்.ஜி.ஆர் மகன்: தந்தை மகன் ஊடலை சொல்லும் படம்: பொன்ராம் | ஹிந்தி டிவி நடிகை பாருல் சவுத்ரி குடும்பம் கொரோனாவால் பாதிப்பு | விடைபெற்றார் விவேக் : அரசு மரியாதையுடன் உடல் தகனம் - மரக்கன்றுகள் ஏந்தி ரசிகர்கள் அஞ்சலி |
அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்தவர் நடிகை ஷாலினி பாண்டே. இந்தப் படம் ரிலீசாகி பெரும் வெற்றியைப் பெற்றதும், படத்துடன் சேர்த்து ஷாலினி பாண்டேவும் பரபரப்பாகப் பேசப்பட்டார். அதன்பின், அவர் கொரில்லா, 100 சதவீத காதல் என இரு தமிழ் படங்களில் நடித்தார்.
தற்போது, அவர் இந்தியில் பிரம்மாண்டமாக செலவு செய்து எடுக்கப்பட்டு வரும் ஒரு புது படத்தில் ரன்வீர் சிங்குடன் இணைந்து நடித்து வருகிறார். தவ்யாங் தாக்கூர் இயக்கும் இந்தப் படத்தின் படபிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
ஷாலினி பாண்டே கூறுகையில், உண்மையிலேயே நான் கொடுத்து வைத்தவர் தான். ரன்வீர் சிங்குடன் நடிக்க தயங்கினேன். ஆனால், அவர் ஒரு சாதாரண மனிதராகவே நடந்து கொள்கிறார். என்னையும் அப்படியே நடத்துகிறார். பெண்களுக்கு நிறைய மரியாதைக் கொடுப்பவராக இருக்கும் அவர், இணைந்து நடிக்கும்போது, நிறைய சொல்லிக் கொடுக்கிறார். இந்தப் படத்தில் என் கதாபாத்திரம் முக்கியமானது. படம் வெளியானதும் என்னுடைய வாழ்க்கை அடுத்த கட்டத்துக்குச் சென்று விடும் என்றார்.