Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பெண்ணியம் பேசி பெண்மையை போற்ற வேண்டியதில்லை: வித்யாபாலன்

15 பிப், 2020 - 11:55 IST
எழுத்தின் அளவு:
Vidayabalan-about-women-power

தேர்ந்தெடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து, தனக்கென ஒரு பிடித்து இருப்பவர் ஹிந்தி நடிகையான வித்யாபாலன். இவர், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது, அவரிடம் பெண்களுக்கு மட்டுமே முக்கியத்தும் கொடுத்து எடுக்கப்படும் படங்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என கேட்டனர்.

அதற்கு அவர் பதிலளித்ததாவது: ஆண்களை மட்டுமே மையமாக வைத்து எடுக்கப்படும் எல்லா படங்களிலும், ஆண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் இருக்கும். ஆனால், பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களில் அப்படி இல்லை. பெண்கள், ஆண்களோடு சேர்ந்து முக்கியத்துவம் இல்லாமலேயே நடித்து முடிக்கின்றனர். படங்களில் பெண்ணியம் பேசுவதும் கூட பெரிய அளவில் தடுக்கப்பட்டே தான் வந்திருக்கிறது. அதற்காக, எல்லா இடங்களிலும் பெண்ணியம் பேசுவதும், பெண்ணியவாதியாக தன்னை காட்டிக் கொள்வதும் தேவையில்லை.

நான் இந்தியா முழுவதும் பல்வேறு பணிகளுக்காகவும் சுற்றி வருகிறேன். பெண்மையைப் போற்றும் நிலை பெரிய அளவில் உருவாகி வருகிறது. அதேநேரம் பெண் சுதந்திரமும் முன் இருந்ததைக் காட்டிலும், தற்போது கூடுதலாக இருப்பதாகவே உணர்கிறேன். ஒரு கிராமத்துப் பெண், அந்த சூழ்நிலைகளை விட்டு விட்டு, தன்னை புதுப் பெண்ணாக மாற்றிக் கொண்டு, நகரங்களில் வந்து வேலை பார்க்கின்றனர். இப்படி தன்னை சூழ்நிலைக்கேற்ப தகவமைத்துக் கொள்ளும் தன்மை பெண்மையிடம் மட்டுமே இருக்கிறது. அதனால், படங்களில்தான் பெண்ணியம் பேசி பெண்மையைப் போற்ற வேண்டும்; காப்பாற்ற வேண்டும் என்பதில்லை என்றார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
லட்சுமி பாம்: அக்ஷய்குமாரை புகழும் லாரன்ஸ்லட்சுமி பாம்: அக்ஷய்குமாரை புகழும் ... சைக்கிள் ரசிகர்: சந்திப்பாரா சல்மான்? சைக்கிள் ரசிகர்: சந்திப்பாரா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Muruga Vel - Mumbai,இந்தியா
15 பிப், 2020 - 17:51 Report Abuse
 Muruga Vel அம்மணி பாலக்காடு பூர்வீகம் ..வளர்ந்தது பெங்கால் ..மணந்தது பஞ்சாபி ..அதுவும் மூணாவதா ..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in