பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
செவ்வாய் கிரஹத்துக்கு முதல் விண்வெளிப் பயணமான மங்கள் யான் திட்டத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்திபடம் மிஷன் மங்கள். இந்தப் படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. படம் உலகம் முழுவது ஓடி, சுமார் 290 கோடி ரூபாயை வசூலாக ஈட்டியது.
இந்தப் படத்தை தமிழ் இயக்குநர் ஜெகன் சக்தி இயக்கி இருந்தார். இதையடுத்து, அவரை இயக்குநராக போட்டு படம் எடுக்க பல தயாரிப்பாளர்களும் முயற்சித்து வருகின்றனர். மிஷன் மங்கள் படத்தில், அக்ஷய் குமார், சோனாக்ஷி சின்ஹா, நித்யா மேனன், டாப்சி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
இந்நிலையில், அவர் அடுத்தும் ஒரு படத்தை நடிகர் அக்ஷய் குமாரை வைத்து எடுக்க முயற்சித்தார். நடிகர் அக்ஷய் குமாரின் கால்சீட் கிடைப்பதில் கால தாமதம் ஏற்பட்டதால், அதற்கு முன்பாக ஒரு படத்தை இயக்கி விடும் முயற்சியில் இறங்கினார் ஜெகன் சக்தி.
அந்தப் படத்துக்கான வேலைகளுக்காக, தன்னுடைய நண்பர்களுடன் ஜெகன் சக்தி பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அவர் மயக்கம் அடைந்து சரிந்தார்.
உடனே, அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கே அவருக்கு தலையில் ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டதாகவும், அவருக்கு, தலையில் புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் தகவல் பரவி இருக்கிறது. இதையடுத்து, திரையுலக பிரபலங்கள் அனைவரும், ஜெகன் சக்தியின் உடல் நிலை குறித்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜெகன் சக்தியின் நண்பரான தயாரிப்பாளர் ஆர்.பால்கி கூறியிருப்பதாவது: ஜெகன் சக்தியின் மூளையில் ரத்தம் உறைந்திருப்பது கண்டறியப்பட்டது. உடனே, அவருக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. தற்போது, ஜெகன் சக்தியின் உடல் நிலை தேறி வருகிறது. விரைவில், அவர் பூரண நலம் பெற்று, முன்பு போலவே செயல்படத் துவங்குவார்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
இதையடுத்து, பாலிவுட் திரையுலகில் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.