'கர்ணன்' - திகைத்துப் போன சந்தோஷ் நாராயணன் | அப்பா தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி | பாடும் நிலா எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு | மீண்டும் களத்தில் குதித்த ஷிவானி | மகன் படப்பிடிப்பிற்காக அதிகாரத்தை பயன்படுத்தவில்லை ; சுமலதா எம்.பி விளக்கம் | ஓணம் பண்டிகைக்கு தள்ளிப்போன மரைக்கார் ரிலீஸ் | தம்பியின் டைரக்சனில் நடிக்கும் அஜ்மல் | மலையாளத்தில் நுழைந்த சந்தோஷ் நாராயணன் | பாபி சிம்ஹா படத்திற்கு இசையமைக்கும் பிரேமம் பட இசையமைப்பாளர் | காதி உடை கொடுத்த கமலை விமர்சித்த சுசித்ரா |
அரசியலில் குதிக்கிறார் தீபிகா?'இதுவரை, 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டேன். ஆனால், அவற்றில் எல்லாம் கிடைக்காத சந்தோஷம், எனக்கு இப்போது தான் கிடைத்துள்ளது' என, உற்சாகத்துடன் கூறுகிறார், தீபிகா படுகோனே. சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்த உலக பொருளாதார மாநாட்டில், மனநலம் குறித்து சிறப்புரையாற்றினார், தீபிகா. அவரது பேச்சுக்கு மாநாட்டில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இது குறித்து தீபிகா கூறுகையில், 'மனநலம் தொடர்பாக, நான் செய்த சமூக பணிகளை கவுரவிக்கும் வகையில், விருது அளித்தனர். இது, எனக்கு மிகவும் சந்தோஷத்தை அளித்தது. நான் செய்துள்ள பணிகள், எனக்கு மிகுந்த மன நிறைவை தந்துள்ளன' என்றார். 'தீபிகா பேசுவதை பார்த்தால், அரசியலில் குதித்தாலும் குதித்து விடுவார் போலிருக்கிறது' என, கிசு கிசுக்கின்றன, பாலிவுட் வட்டாரங்கள்.