Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ரஜினி சம்பளத்தை 'ஓவர்டேக்' செய்த அக்ஷய்குமார்

23 ஜன, 2020 - 16:18 IST
எழுத்தின் அளவு:
Akshay-kumar-charging-Rs.120-crore-for-his-next-film

இந்தியத் திரையுலகத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் என்ற பெயர் ரஜினிக்கு இருந்து வந்தது. அவருடைய சமீபத்திய படமான 'தர்பார்' படத்திற்காகக் கூட அவர் 100 கோடி சம்பளம் வாங்கியதாக ஒரு தகவல் உண்டு.

பல ஹிந்தி ஹீரோக்கள் சம்பளத்திற்குப் பதிலாக, அவர்கள் நடிக்கும் படங்களில் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை வாங்கிக் கொள்ளும் நடைமுறையை பாலோ செய்து வருகிறார்கள். ஒரு சிலர் மட்டுமே சம்பளமாக ஒரு தொகையை நிர்ணயித்துக் கொள்கிறார்கள்.

அந்த வகையில் ரஜினியின் சம்பளமான 100 கோடியை, 2.0 படத்தின் வில்லனான அக்ஷய் குமார் ஓவர்டேக் செய்துள்ளார். அவர் அடுத்து நடிக்க ஹிந்திப் படத்திற்காக 120 கோடி சம்பளம் கேட்டுள்ளதாக பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறியிருக்கிறார்.

தனுஷ், ஹிந்தியில் அறிமுகமான 'ராஞ்சனா' படத்தை இயக்கிய ஆனந்த் எல்.ராய் அந்தப் படத்தை இயக்க உள்ளார். தனுஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். சாரா அலிகான் நாயகியாக நடிக்கப் போகிறார்.

கடந்த ஆண்டு அக்ஷய் நடித்து வெளிவந்த “கேசரி, மிஷன் மங்கள், ஹவுஸ்புல் 4, குட் நியூஸ்'' ஆகிய அனைத்துப் படங்களுமே சுமார் 200 கோடி வசூலைக் கடந்தன. இவற்றின் மூலமாக மட்டும் சுமார் ரூ.800கோடிக்கும் அதிகமாக வசூலாகியுள்ளது. அதனால் தான் அக்ஷய் அவருடைய சம்பளத்தை உயர்த்திவிட்டார் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இந்திரா ஜெய்சிங்கையும் சிறையில் அடையுங்கள் : கங்கனா ஆத்திரம்இந்திரா ஜெய்சிங்கையும் சிறையில் ... அரசியலில் குதிக்கிறார் தீபிகா? அரசியலில் குதிக்கிறார் தீபிகா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in