ரஜினியை கண்டிப்பாக இயக்குவேன் : தேசிங்கு பெரியசாமி வெளியிட்ட தகவல் | மலையாள லெஸ்பியன் படத்திற்கு எதிர்ப்பு | ஹிந்தி படத்தை வெளியிடுவதேன்? உதயநிதி பதில் | சிறந்த அறிமுக ஹீரோவுக்கான விருது பெற்ற சதீஷ் | கவர்னருடன் சந்திப்பு ; மீண்டும் அரசியல் வரும் திட்டமா - ரஜினி பதில் | பாலிவுட் படங்களை புறக்கணிக்கும் கிரித்தி ஷெட்டி | மராட்டிய மொழி படத்தில் ஷான்வி | சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி | 200 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்தேன்: அமெரிக்க நடிகை அதிர்ச்சி தகவல் | கணவன் வீட்டில் அனுபவித்த கொடுமைகள்: மனம் திறந்தார் மகேஸ்வரி |
டில்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிப்.,1 ம் தேதி காலை 6 மணிக்கு குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிடும் பணியை திகார் சிறை நிர்வாகம் கவனித்து வருகிறது. இதற்கிடையில் கடந்த வாரம் மீடியாக்களுக்கு பேட்டி அளித்த மனித உரிமைகள் அமைப்பின் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை குற்றவாளிகளை சோனியா மன்னித்ததை போன்று, அவரை முன்னுதாரணமாககக் கொண்டு நிர்பயாவின் தாயும் குற்றவாளிகளை மன்னிக்க வேண்டும் என கேட்டிருந்தார்.
வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கின் இந்த கருத்திற்கு நிர்பயாவின் தாய் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் பங்கா படத்தின் புரொமோஷன் பணிகளில் இருந்த கங்கனாவிடம் இந்திரா ஜெய்சிங் கோரிக்கை பற்றி செய்தியாளர்கள் கேட்டனர்.
இதற்கு பதிலளித்த கங்கனா, நிர்பயா குற்றவாளிகள் இருக்கும் சிறையில் அவர்களுடன் சேர்த்து இந்திரா ஜெய்சிங்கையும் 4 நாட்கள் சிறையில் அடையுங்கள். இவரை போன்ற பெண்களால் தான் அரக்கர்களும் கொலைகாரர்களும் உருவாக்கப்படுகிறார்கள் என ஆவேசமாக பதிலளித்தார். கங்கனா, பல்வேறு சமூக பிரச்னைகளிலும் அவ்வப்போது கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.