டாப்ஸி படத்தில் கதாநாயகியாக சமந்தா | விக்ரம் படம் பார்த்துவிட்டு கமலை வாழ்த்திய வானதி சீனிவாசன் | மலையாள இயக்குனர் தமிழில் இயக்கும் படத்தில் ஹீரோவாக சரத்குமார் | உருக்கமாக பதிவிட்டு அனுதாபம் தேடும் பாலியல் புகார் நடிகர் | ஆதித்த கரிகாலன், வந்தியத் தேவன் வருகை : மற்றவர்கள் எப்போது ? | உதயநிதியின் அடுத்த படத் தலைப்பு 'கழகத் தலைவன்' ? | எதற்கும் அஞ்சமாட்டேன் ; உயிரை விடவும் தயார் : காளி போஸ்டர் சர்ச்சைக்கு லீனா மணிமேகலை பதில் | கைதி படத்தின் ஹிந்தி ரீமேக் : இயக்குநர் திடீர் மாற்றம் | பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் : அறிமுக நடிகை அதிர்ச்சி தகவல் | ஹிந்தி விக்ரம் வேதா பட்ஜெட் அதிகரிப்பா? - தயாரிப்பு தரப்பு விளக்கம் |
பத்மாவத், சப்பாக் படங்களைத் தொடர்ந்து 83 என்ற படத்தில் ரன்வீர் சிங்குடன் நடித்து வருகிறார் தீபிகா படுகோனே. இதையடுத்து அவர் 19ஆம் நூற்றாண்டை சேர்ந்த பெங்காலி நாடக நடிகை நத்தி பினோதினியின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. தனது 13 வயதில் நடிகையான இவர் 23 வயதில் திருமணம் செய்து கொண்டு நடிப்பை விட்டு விலகியவராம். அவரது நடிப்பு பெங்காலி நாடகத்துறையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.
இந்த கதையில் நடிக்க தீபிகா படுகோனே முதலில் விருப்பம் தெரிவித்தபோதும், தொடர்ந்து வரலாற்றுக் கதைகளில் நடிக்க விரும்பவில்லை என கூறிவிட்டாராம். இதையடுத்து அந்த படத்தில் இப்போது ஐஸ்வர்யா ராய் நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனில் தற்போது நடித்து வரும் ஐஸ்வர்யாராய், இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், பெங்காலி நடிகையின் வாழ்க்கை கதையில் நடிக்க போகிறாராம்.