Advertisement

சிறப்புச்செய்திகள்

விவேக் மறைவு என்னை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தியது - இளையராஜா | மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்துவோம் - சிம்பு | பிக்பாஸ் வீட்டுக்கு ஒரு வாரம் லீவு போட்ட சுதீப் | ஆறு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மீரா ஜாஸ்மின் | சித்தார்த் பிறந்தநாளில் மகாசமுத்ரம் போஸ்டர் வெளியீடு | தமிழில் உருவாகும் மோசன் காமிக்ஸ் சூப்பர் ஹீரோ படம் | இறுதிக்கட்டத்தில் அதர்வா படம் | எம்.ஜி.ஆர் மகன்: தந்தை மகன் ஊடலை சொல்லும் படம்: பொன்ராம் | ஹிந்தி டிவி நடிகை பாருல் சவுத்ரி குடும்பம் கொரோனாவால் பாதிப்பு | விடைபெற்றார் விவேக் : அரசு மரியாதையுடன் உடல் தகனம் - மரக்கன்றுகள் ஏந்தி ரசிகர்கள் அஞ்சலி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

உணவும் திருமணமும் ஒன்றா?: ஷில்பா ஷெட்டி விளக்கம்

04 ஜன, 2020 - 16:54 IST
எழுத்தின் அளவு:
Shilpa-Shetty-about-food

பெண்கள் தாங்கள் அழகாகவும்; கட்டுக்கோப்பான உடல் அமைப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காகவும் உணவை கட்டுப்படுத்துகின்றனர். சிலர் அதை தவிர்க்கின்றனர். அது தவறான அணுகுமுறை என நடிகை ஷில்பா ஷெட்டி கூறியிருக்கிறார். கரீனா கபூர் வானொலி நிகழ்ச்சியாக வாட் எ வுமன் வாண்ட் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அந்த நிகழ்ச்சியின் 4வது எபிசோட்டில் சமீபத்தில் கலந்து கொண்டார் இந்தி திரையுலகின் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி.
உடற் தகுதி சம்பந்தமாக அந்த நிகழ்ச்சியில் பேசினார் நடிகை ஷில்பா ஷெட்டி.

அப்போது அவர் பேசியதாவது: நான் திருமணம் ஆனவர். எனக்கு ஏழு வயதில் வயான் என்ற பையன் இருக்கிறான். இத்தனைக்கும் பின்னும் நான் கட்டுக்கோப்பான உடல் அமைப்புடன் இருப்பது குறித்து பலரும் வியப்பாக பேசுகின்றனர். நான், தொடர்ச்சியாக உடற்பயிற்சிக் கூடத்துக்கு செல்வதாகவும், அங்கு கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டு வருவதாகவும் சொல்கின்றனர். ஆனால், நான் அப்படியெல்லாம் பெரிய அளவில் செய்வதில்லை. அப்படி செய்வதால் மட்டும் உடல் எடை குறைந்து விடும் என்றோ, உடல் கட்டுக்கோப்பாக ஆகி விடும் என்றோ யாரும் நினைத்துக் கொள்ள வேண்டாம்.

ஒரு சிலர், உடற்பயிற்சியோடு உணவையும் வெகுவாக குறைக்கின்றனர். அது தவறான புரிதல். அப்படியெல்லாம் செய்யக் கூடாது. அப்படி செய்வதால், உடம்புதான் கெட்டுப் போகும். இது என்னுடைய அனுபவத்தில் கண்ட உண்மை. வயதுக்கு வந்த பெண் திருமணத்தை தவிர்ப்பதோ, தள்ளிப் போடுவதோ கூடாது என நாம் சொல்கிறோம். அதைப் போல, நல்ல உடல் அமைப்பு பெற வேண்டும் என விரும்பும் பெண்கள், ஒருபோதும் உணவை தவிர்ப்பதோ, தள்ளிப் போடுவதோ கூடாது என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அறையில் சிக்கிய ஜான்வி!அறையில் சிக்கிய ஜான்வி! ரூ.16 கோடி வீட்டை விட்டு, வாடகை வீட்டில் தீபிகா ரூ.16 கோடி வீட்டை விட்டு, வாடகை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in