Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

வீடு திரும்பினார் ‛கானக்குயில்' லதா மங்கேஷ்கர்

09 டிச, 2019 - 13:15 IST
எழுத்தின் அளவு:
Lata-mangeshkar-backs-to-home-after-28-days

இந்தியாவின் பெருமைமிகு அடையாளம் ‛கானக்குயில்' லதா மங்கேஷ்கர். 90 வயதான இவர், கடந்த மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டு மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். கடந்த சில மாதங்களாகவே அவர் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள், பதட்டங்கள் நிறைந்திருந்தது. தற்போது உடல்நலம் பெற்று வீடு திரும்பியிருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த 28 நாட்களாக பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தேன். எனக்கு நிமோனியா பாதிப்பு இருப்பது டாக்டர்களின் பரிசோதனையில் தெரியவந்தது. டாக்டர்கள் முழுமையாக குணமடைந்தவுடன் வீட்டுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். கடவுளின் ஆசீர்வாதங்களுடன் வீடு திரும்பி உள்ளேன்.

நான் குணம் அடைய பிரார்த்தனை செய்த எல்லா நலம் விரும்பிகளுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் பிரார்த்தனைகளும், வாழ்த்துகளும் பலன் அளித்துள்ளன. உங்கள் ஒவ்வொருவரையும் தாழ்மையுடன் தலை வணங்குகிறேன் என தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நடிகர்களை கொண்டாடுவது ஆணாதிக்க மனோபாவம்: டாப்ஸிநடிகர்களை கொண்டாடுவது ஆணாதிக்க ... சகோதரியை இழந்தார் நவாசுதீன்: திரையுலகம் ஆறுதல் சகோதரியை இழந்தார் நவாசுதீன்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in