Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

இந்திய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ள அக்ஷய்குமார்

07 டிச, 2019 - 16:50 IST
எழுத்தின் அளவு:
Akshay-kumar-apply-for-indian-Passport

ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகரும், தமிழில் 2.0 படத்திலும் நடித்தவர் அக்ஷய்குமார். இந்த ஆண்டு நடைபெற்ற பார்லிமென்ட் தேர்தலில் அவர் வாக்களிக்கவில்லை. அவர் கனடா நாட்டு குடியுரிமை பெற்றவர் என்பதால் தான் அவர் வாக்களிக்கவில்லை என்ற விவரம் அதன் பின்னரே வெளிவந்தது. அது பெரிய சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

இந்தியாவில் நடித்து பல கோடி சம்பாதித்து இந்தியா நாட்டின் குடிமகனாக இல்லாமல் இருப்பதா என பலரும் விமர்சித்தார்கள். இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தான் இந்திய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ளதாக அக்ஷய்குமார் தெரிவித்துள்ளார்.

“ஆரம்ப காலத்தில் என்னுடைய 14 படங்கள் தொடர் தோல்வியைச் சந்தித்தன. அப்போது கனடாவில் இருக்கும் என் நெருங்கிய நண்பன் கனடாவிற்கு வருமாறு அழைத்தார். அங்கு ஏதாவது ஒன்றாக செய்யலாம் என்றான். அவனும் ஒரு இந்தியன் தான், ஆனால் அங்கு செட்டிலானவன். என்னுடைய நடிப்புலக வாழ்க்கை முடிந்ததாக நினைத்து கனடா குடியுரிமைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றேன். ஆனால், என்னுடைய 15வது படம் வெற்றி பெற்றது, அதன் பின் என் வாழ்க்கையில் எந்த பின்னடையும் இல்லை. ஆனால், எனது பாஸ்போர்ட் மாற்றம் பற்றி என்றுமே சிந்தித்ததில்லை.

இப்போது மக்கள் எனது பாஸ்போர்ட் விவகாரத்தைப் பற்றிப் பேசுவதால் என்னுடைய தேசபக்தியைக் காட்ட இந்திய பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பித்துள்ளேன். இது எனக்கு வலியைத் தருகிறது. இதை மற்றவர்களுக்கு ஒரு வாய்ப்பாகக் கொடுக்க விரும்பவில்லை. என் மனைவி டிவிங்கிள் கண்ணா இந்தியன், என் மகன் இந்தியன். நானும் இங்குதான் வரி கட்டுகிறேன். எனது வாழ்க்கை இங்குதான், ஆனாலும் சிலர் ஏதோ சொல்ல விருப்பப்படுகிறார்கள், பரவாயில்லை,” என்று அக்ஷய் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ஹிந்தியில் பிசியாகும் பூஜா ஹெக்டேஹிந்தியில் பிசியாகும் பூஜா ஹெக்டே நடிகர்களை கொண்டாடுவது ஆணாதிக்க மனோபாவம்: டாப்ஸி நடிகர்களை கொண்டாடுவது ஆணாதிக்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Asagh busagh - Munich,ஜெர்மனி
11 டிச, 2019 - 00:14 Report Abuse
Asagh busagh பூசி முழுகுறான். கனடா குடியுரிமை பெற அங்கு தொடர்ந்து 3 வருடமாவது குடியிருக்கணும். அதையும் ஏமாத்தி வங்கியிருப்பான். இப்போ இந்திய குடியுரிமை பெற கனடா பாஸ்ப்போர்ட்டை சரண்டர் செய்யணும். அதையும் உண்மையா செய்யமாட்டான்.
Rate this:
Loganathaiyyan - Kolkata,இந்தியா
09 டிச, 2019 - 16:49 Report Abuse
Loganathaiyyan என்ன ஒரு அறிவற்ற அதாவது அமைதியான நாடு இது இவ்வளவு பணம் செய்வானாம் ஆனால் அவனிடம் இந்திய குடியுரிமை கூட இல்லையாம் ஆனால் இந்தியாவில் தானிருப்பானாம்???யாருக்கும் விசா பலவருடங்களுக்கு இந்தியா கொடுப்பதில்லையே???கனடா குடியுரிமை???ஆனால் இருப்பது இந்திய குடிமகனாக??இவனெல்லாம் நமக்கு ரோல் மாடேல்???வேடிக்கை என்னவென்றால் இவன் வருடத்திற்கு 23 மில்லியன் டாலர் செய்கின்றான் அதாவது இதுவரை 150 மில்லியன்டாலர் அதாவது ரூ 1,050 கோடி???ஆனால் இந்திய குடியுரிமை இல்லை???????
Rate this:
Anbu - Riyadh,சவுதி அரேபியா
09 டிச, 2019 - 07:25 Report Abuse
Anbu அக்ஷய் சார் எல்லார் வாயையும் அடைக்க முடியாது. you are great patriot. keepup your good work.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in