யேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ் | நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ் | நம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி நடிகர் ஷார்ம் விஸ்வநாதன் | இருட்டு, ரசிகர்களை மிரட்டும் - நடிகை விமலா ராமன் | பிரமோசனுக்காக டிக்-டாக்கில் நடனமாடும் ராஷ்மிகா | தெலுங்கில் அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹா | தொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன் | விஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை! - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா! | 2019ல் த்ரிஷா, நடிக்க வந்து 18வது வருடத்திலும் தொடரும் பயணம் |
தமிழில் விஜய்யை வைத்து தனது அடுத்தடுத்த மூன்று படங்களை இயக்கிய அட்லி, முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறிவிட்டார். இந்தக் கூட்டணியில் தீபாவளிக்கு வெளிவந்த 'பிகில்' படம் 300 கோடி வசூலைக் கொடுத்ததாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இதனிடையே, அட்லி அடுத்து ஷாரூக்கானை இயக்க உள்ளார் என்று தகவல் வெளியாகின. படத்திற்கு 'சங்கி' எனப் பெயர் வைத்துவிட்டதாகவும் சொன்னார்கள். ஷாரூக்கானின் பிறந்தநாளில் இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றார்கள். ஆனால், இன்னும் வரவில்லை. ஷாரூக்கானின் பிறந்தநாள் பார்ட்டியில் அட்லி, அவரது மனைவியுடன் கலந்து கொண்டதால் ஷாரூக் படத்தை இயக்குவது ஏறக்குறைய உறுதியானது.
தற்போதைய பாலிவுட் தகவலின்படி இந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முதல் ஆரம்பமாகும் என்கிறார்கள். படப்பிடிப்புக்கு முன்புதான் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாக உள்ளதாம்.