Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பாடகி கீதா மாலி கார் விபத்தில் பலி

16 நவ, 2019 - 14:56 IST
எழுத்தின் அளவு:
Singer-Geeta-mali-dead-in-accident

பிரபல மராத்தி பாடகி கீதா மாலி. இவர் ஏராளமான பாலிவுட் திரைப்படங்களில் பாடி உள்ளார். தனியாக இசை ஆல்பங்களையும் வெளியிட்டு இருக்கிறார். அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று இசை நிகழ்ச்சிகளில் கலந்த கொள்வார்.

அதன்படி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக சமீபத்தில் அமெரிக்கா சென்று இருந்தார். நிகழ்ச்சிகளை முடித்து விட்டு அங்கிருந்து மும்பை திரும்பினார். அவரை அவரது கணவர் விஜய் வரவேற்று நாசிக் நகருக்கு அழைத்துச் சென்றார். தானே மாவட்டத்தில் உள்ள சாஹப்பூர் என்ற இடத்தில் அதிகாலை 3 மணிக்கு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது ரோடு ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கன்டெய்னர் லாரி மீது எதிர்பாராதவிதமாக கார் திடீரென்று மோதியது.

இந்த விபத்தில் கீதாவும், அவரது கணவரும் படுகாயம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி பாடகி கீதா மாலி இறந்தார். அவரது கணவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கீதா மாலி மறைவுக்கு மராத்தி பட உலகினர் மற்றும் பாலிவுட் பட உலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வீரம் ஹிந்தி ரீமேக்: அக்ஷய்குமாருக்கு ஜோடியாகும் கீர்த்தி சனோன்வீரம் ஹிந்தி ரீமேக்: ... நயன்தாரா படம் ஹிந்தியிலும் ரீ-மேக் ஆகிறது நயன்தாரா படம் ஹிந்தியிலும் ரீ-மேக் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in