Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

அமெரிக்காவில் ப்ரியங்கா சோப்ராவின் கனவு இல்லம்!

15 நவ, 2019 - 19:12 IST
எழுத்தின் அளவு:
Priyanka-Chopras-Dream-house

கோடிகளை வாரி இறைத்து, வீடு வாங்குவது நடிகர் - நடிகையருக்கு பேஷன். அந்த வகையில், முன்னாள் உல அழகியும், பாலிவுட் நடிகையுமான ப்ரியாங்கா சோப்ரா, அமெரிக்காவில், 144 கோடி ரூபாய்க்கு, மிகப் பிரம்மாண்டமான கனவு இல்லம் ஒன்றை வாங்கி இருக்கிறார்.

ப்ரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவரோடு சேர்ந்து உலகம் முழுவதும் சுற்றிக் கொண்டிருக்கும் அவர், சமீபத்தில், அமெரிக்காவிலேயே வீடு வாங்கி, அங்கேயே செட்டில் ஆகப் போவதாக தெரிவித்திருந்தார்.

இதற்காக அவர் தனது கனவுலக வீட்டை வடிமைத்து அதன்படியே வீடு தேடினார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அருகில் இருக்கும் ஒரு ஏரியாவில் மிகப் பிரம்மாண்டமான வீடு ஒன்றை வாங்கி இருக்கின்றனர். மும்பையில் இருந்து அவர், அமெரிக்காவுக்கு சென்று, புதிய வீட்டில் குடியேறி, அங்கேயே தங்கப் போகிறார்.

இருபது ஆயிரம் சதுரடியில் கட்டப்பட்டிருக்கும் மிகப் பிரம்மாண்டமான அந்த வீட்டின் மதிப்பு இந்திய ரூபாய்க்கு 144 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த வீட்டில், ஏழு பெட்ரூம்களும், 11 பாத்ரூம்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த வீடு குறித்து ப்ரியங்கா சோப்ரா கூறியிருப்பதாவது: நான், கணவர் நிக் ஜோன்ஸுடன் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என நினைத்திருக்கிறேனோ, அப்படியெல்லாம் வாழ முயற்சிக்கிறேன். அவரோடு, இப்படியொரு வீட்டில் தான் வாழ வேண்டும் என கனவு கண்டேன். அப்படியொரு வீட்டை வாங்கி விட்டோம். இனி, அந்த வீட்டை அணு அணுவாக ரசித்து வாழ்வோம்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
அனுஷ்காவின் புதிய கொள்கை!அனுஷ்காவின் புதிய கொள்கை! செய்னா: அவருக்கு பதில் இவர் செய்னா: அவருக்கு பதில் இவர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

dhana - thanjavur,இந்தியா
16 நவ, 2019 - 15:20 Report Abuse
dhana என்சிமா, அல்ல என் சினிமா ,
Rate this:
dhana - thanjavur,இந்தியா
16 நவ, 2019 - 15:16 Report Abuse
dhana கனவர் அல்ல கணவர்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in