யேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ் | நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ் | நம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி நடிகர் ஷார்ம் விஸ்வநாதன் | இருட்டு, ரசிகர்களை மிரட்டும் - நடிகை விமலா ராமன் | பிரமோசனுக்காக டிக்-டாக்கில் நடனமாடும் ராஷ்மிகா | தெலுங்கில் அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹா | தொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன் | விஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை! - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா! | 2019ல் த்ரிஷா, நடிக்க வந்து 18வது வருடத்திலும் தொடரும் பயணம் |
‛ராம்லீலா' படத்தில் முதன்முறையாக இணைந்து நடித்தனர் பாலிவுட் பிரபலங்கள் ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே. அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. தொடர்ந்து, ‛பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத்' படங்களிலும் நடித்தனர். 6 ஆண்டுகளாக காதலித்த இந்த ஜோடி, கடந்தாண்டு இத்தாலியில் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் திருமணம் நடந்து ஓராண்டு கடந்துவிட்ட நிலையில் முதல் திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக திருமலை சென்ற இவர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசித்தனர். கோவிலை விட்டு வெளியே வந்த தீபிகா - ரன்வீர் உடன் ஏராளமான பேர் செல்பி எடுக்க ஆர்வம் காட்டினர்.