Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பானிபட்: பாலிவுட்டின் அடுத்த பிரமாண்ட சரித்திர படம்

13 நவ, 2019 - 13:47 IST
எழுத்தின் அளவு:
PaniPat:-Bollywoods-another-historical-epic-movie

இந்தியாவை மராட்டிய மன்னர்கள் ஆட்சி செய்தபோது ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவை கைப்பற்ற முகலாய மன்னர்கள் படை எடுத்தபோது அதை எதிர்த்து மராட்டிய மன்னர்களும், வீரர்களும் கடுமையாக போரிட்டனர். இதற்கு பானிபட் என்று பெயர். 3 பானிபட் யுத்தங்கள் நடந்தது.

இதனை மையமாக வைத்து தயாராகி உள்ள படம் பானிபட். இதில் அர்ஜுன் கபூர் மராட்டிய தளபதி சதாஷிவ ராவாகவும், சஞ்சய் தத் ஆப்கானிஸ்தான் மன்னர் அகமத் ஷா அப்பலியாகவும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர கீர்த்தி சனான், மோனிஷா பாலி, ஜீனத் அமன், குனால் கபூர் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஜோதா அக்பர், ஸ்வதேஷ், லகான்' படங்களை இயக்கிய அஷுதோஷ் கோவரிகர் இயக்கி உள்ளார்.

1761 ஆம் ஆண்டு பின்னணியில் அமைக்கப்பட்ட 'பானிபட்' திரைப்படத்தின் கதைகளம் மராட்டிய சாம்ராஜ்யத்தைப் பற்றியது. அச்சமயம் மராட்டிய சாம்ராஜ்யம் தனது உச்சநிலையை எட்டி இருந்தது. இத்தகைய ஒரு சூழ்நிலையில் படையெடுத்து வருகின்ற ஆப்கானிஸ்தான் மன்னர் அஹ்மத் ஷா அப்தாலியின் (சஞ்சய் தத்) படைகளை விரட்டும் பொருட்டு, மராட்டிய இராணுவ தளபதி சதாஷிவ் ராவ் பாவு (அர்ஜுன் கபூர்) வடதிசை நோக்கி தனது படைகளுடன் ஆப்கானிஸ்தான் படைகளை எதிர்த்து ஒரு அவசரப் போர் பயணத்தை துவக்கி, தனது படைகளை வழிநடத்துகிறார். போர் எப்படி நடக்கிறது, வெற்றி யாருக்கு என்பதான் படத்தின் கதை. டிசம்பர் 6 ஆம் தேதி வெளிவருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தீபிகா படுகோனேவிற்கு வைரஸ் காய்ச்சல்தீபிகா படுகோனேவிற்கு வைரஸ் ... ஹிந்தி படம் : கீர்த்தி சுரேஷ் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும் ஹிந்தி படம் : கீர்த்தி சுரேஷ் ஒரு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in