காப்பி அடிக்கிறேனோ, தமன் கோபம் | விஜய்க்கு சிலை வைத்த கர்நாடக ரசிகர்கள் | பிக்பாஸ் வெற்றியாளர்கள் சாதித்தார்களா? | ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை | ஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம் | கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : நலமாக இருப்பதாக மகள்கள் அறிக்கை | 'மாஸ்டர்' தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் | பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் |
'என் திரையுலக வாழ்க்கையில், இது, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த படமாக இருக்கப் போகிறது. இந்த படம் வெளியாகும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்' என, பெருமிதத்துடன் கூறுகிறார், ஆலியா பட்.
இவர், இதுவரை நடித்த வேடங்கள் எதுவும், ரசிகர்களிடம் பெரிய பாராட்டு எதையும் பெறவில்லை. இதனால், சவாலான வேடத்தை எதிர்பார்த்து காத்திருந்த அவருக்கு, அதற்கு ஏற்ற மாதிரி, ஒரு தெலுங்கு பட வாய்ப்பு கிடைத்துள்ளது. பாகுபலி இயக்குனர் ராஜமவுலி இயக்கும் இந்த படத்தில், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அஜய் தேவ்கன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களுடன் களம் இறங்கியுள்ளார், ஆலியா. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், ஆந்திராவில் நடந்த சுதந்திர போராட்டத்தை மையமாக வைத்து, இந்த படத்துக்கு கதைக்களம் அமைத்துள்ளார், ராஜமவுலி.