ரோஜா சீரியல் நடிகைக்கு திடீர் திருமணம் | மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் சசிகுமார் | நான் உங்கள் ரசிகன் : வில்லன் நடிகரை குஷிப்படுத்திய விஜய் | ‛தாமி' படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் தமிழ் கதாநாயகி சுவிதா | வெப்சீரிஸ் இயக்கும் அருண்ராஜா காமராஜ் | வித்யாபாலனை பாலிவுட்டில் அறிமுகப்படுத்திய இயக்குனர் பிரதீப் சர்க்கார் காலமானார் | இரண்டிரண்டு நாயகர்ளுடன் பத்து தல Vs விடுதலை | திருமணத்திற்குப் பிறகு கிளாமர் நடனத்தில் சாயிஷா | படப்பிடிப்பில் அக்ஷய் குமாருக்கு விபத்து : அதிர்ச்சியில் ரசிகர்கள் | நல்ல படங்கள் இல்லை, தடுமாறும் தியேட்டர்கள், பல காட்சிகள் ரத்து |
ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தில் அவரது ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சோனாக்ஷி சின்ஹா. தற்போது சல்மான்கானுடன் தபங் 3 படத்தில் நடித்து வருகிறார். பேஷன் சூப்பர் ஸ்டார் என்ற டிஜிட்டல் ரியாலிட்டி ஷோ ஒன்றையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
அதன் சமீபத்திய வீடியோ ஒன்றில் தனக்கு சமூக வலைத்தளங்களில் நடக்கும் டிரோல்கள் பற்றி வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
“சில வருடங்களாகவே என்னுடைய உடல் பருமன் குறித்து பலமாக டிரோல் செய்யப்பட்டுள்ளேன். அதற்கு எதிராக கருத்து தெரிவிக்க வேண்டும் என்று நினைத்ததேயில்லை. அவர்களைவிட நான் பெரியவள் என்பதே அதற்குக் காரணம். 30 கிலோ குறைந்த பின்னும் கிண்டலடித்தார்கள். எனது வளைவுகள், எனது எடை, எனது இமேஜ், என நான் எதையும் மறைப்பதில்லை,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த வீடியோவின் ஆரம்பத்தில் அவர் எப்படியெல்லாம் கிண்டலடிக்கப்பட்டார் என்பதையும் தெரிவித்துள்ளார்.
“கேட்வாக்கில் மாடு, ஆன்ட்டி ஜி, குண்டு, யானை,” என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் தன்னை கிண்டலடித்துள்ளார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
உடல் பருமனைப் பற்றிய கிண்டல்களுக்கும், அது சார்ந்த நகைச்சுவைக்கும் தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. விஜய் நடித்து சமீபத்தில் வெளிவந்த பிகில் படத்தில் இடம் பெற்ற குண்டம்மா வசனத்திற்கும் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
Let's talk about the elephant in the room!
For years I've been trolled because of my weight. I've never felt the need to react because I always believed i was #BiggerThanThem... pun intended. But on the next episode of @MyntraFS I asked the contestants to take to social media, pic.twitter.com/wvu1P9OY2o
— Sonakshi Sinha (@sonakshisinha) October 30, 2019