Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஆம்புலன்ஸ் கிடைக்காததால் பிரசவத்தில் நடிகை பலி

23 அக், 2019 - 10:26 IST
எழுத்தின் அளவு:
No-ambulance:-Actress-Pooja-Zunjar-and-newborn-baby-die-after-delivery

மஹாராஷ்டிராவில், பிரசவத்தின் போது குழந்தை இறந்ததை அடுத்து, உயிருக்கு போராடிய மராத்திய நடிகைக்கு, சரியான நேரத்தில், ஆம்புலன்ஸ் கிடைக்காததால், அவரும் உயிரிழந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் உள்ள, ஹின்கோலி மாவட்டத்தைச் சேர்ந்தவர், பூஜா ஸுன்ஜார், 25. இவர், மராத்தி மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார். கர்ப்பிணியாக இருந்த பூஜாவுக்கு, கடந்த ஞாயிறு நள்ளிரவு, பிரசவ வலி எடுத்தது.

இதையடுத்து, ஹின்கோலி மாவட்டம், கோரேகாவ்ன் கிராமத்தில் உள்ள மருத்துவமனையில், அவர் அனுமதிக்கப்பட்டார். குழந்தை பிறந்த சற்று நேரத்தில், உயிரிழந்தது. நடிகை பூஜாவின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து, அவரை, 40 கி.மீ., தொலைவில் உள்ள, ஹின்கோலி மாவட்ட பொது மருத்துவமனையில், உடனடியாக அனுமதிக்குமாறு, டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

அந்த மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் இல்லாததால், வெளியில் இருந்து, வாடகைக்கு ஆம்புலன்ஸ் அழைக்க, அவரது உறவினர்கள் முயன்றனர். பல மணி நேரமாக முயன்றும், ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. இறுதியில், ஒரு தனியார் ஆம்புலன்சில், நடிகை பூஜாவை ஏற்றி சென்றனர். மருத்துவமனை செல்லும் வழியில், நடிகை பூஜா, பரிதாபமாக உயிரிழந்தார். சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைத்திருந்தால், பூஜாவை காப்பாற்றி இருக்கலாம் என அவரது உறவினர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ராகுலோடு நல்ல நட்பு இருக்கிறது: காதலை மறுக்கும் நிதிராகுலோடு நல்ல நட்பு இருக்கிறது: ... நடிப்புக்கு ஏது மொழி? - கீர்த்தி கர்பண்டா நடிப்புக்கு ஏது மொழி? - கீர்த்தி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
27 அக், 2019 - 18:16 Report Abuse
Pugazh V மகாராஷ்டிரா வில் இட ஒதுக்கீடு ஆம்புலன்ஸ், இட ஒதுக்கீடு முதல்வர், இட ஒதுக்கீடு அமைச்சர் போல. என்ன... திராவிட மருத்துவர்கள் இருந்திருந்தால் அந்த பேஷண்ட் காப்பாற்றப் பட்டிருப்பார்.
Rate this:
vasumathi - Sindhathari Pettai ,இந்தியா
24 அக், 2019 - 06:22 Report Abuse
vasumathi பாவம். நிறைய மருத்துவ கல்லூரிகள். நிறைய மருத்துவர் வருவார்கள் . உரிய நேரத்தில் கிடைப்பது அரிதாகிறது. இன்னும் எத்தனை வருடங்கள். இது ஆஸ்திரேலியாவிலும் நடப்பதுதான்.
Rate this:
Rafi - Riyadh,சவுதி அரேபியா
23 அக், 2019 - 20:00 Report Abuse
Rafi தமிழகம் திராவிட அரசியலில் முன்னேறிவிட்டது என்பதற்கு இதுவும் சாட்சி
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in