திருமதி.ஹிட்லர் சீரியலின் ஹீரோயின் என்ன செய்கிறார் தெரியுமா? | ஜான்சி ராணி ரோலில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் ரச்சிதா | திவ்யா கிருஷ்ணனுக்கு சல்யூட் அடிக்கும் ரசிகர்கள் | டுவிட்டரில் நுழைந்த விக்ரம் | விஜய் ஆண்டனியின் ஒரு படத்தைக் கூடப் பார்க்காத மிஷ்கின் | சமந்தாவின் ‛யசோதா' ரிலீஸ் எப்போது | லட்சுமி ராமகிருஷ்ணன் படத்திற்கு இளையராஜா இசை | அடுத்த ஹனிமூன் டிரிப்பா ; ரசிகர்கள் கேள்வி | தமிழ், தெலுங்கில் ரீமேக்காகும் ஆலியா பட்டின் டார்லிங்ஸ் | வெந்து தணிந்தது காடு 2வது பாடல் ஆக.,14ல் வெளியாகிறது |
தமிழில் 2017ம் ஆண்டு புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன் மற்றும் பலர் நடிக்க வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் 'விக்ரம் வேதா'. இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யப் போவதாக எப்போதோ அறிவித்தனர். ஆனால், யார் யார் நடிக்கப் போகிறார்கள் என்பதில் நீண்ட இழுபறி இருந்து வந்தது.
பாலிவுட்டின் தற்போதைய தகவல்படி விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் அமீர்கான், மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலிகான் நடிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த ரீ-மேக்கில் நடிப்பதற்காக அமீர்கான் 'மோகுல்' படத்தில் நடிப்பதையும் தள்ளிவைத்து விட்டாராம். இதன் மூலம் 19 ஆண்டுகளுக்கு பின்னர் அமீர்கானும், சைப் அலிகானும் இணைந்து நடிக்க உள்ளனர்.
2020 ஏப்ரல் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாம்.