Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஷாரூக்கானை இயக்கப் போகும் அட்லீ?

16 அக், 2019 - 12:49 IST
எழுத்தின் அளவு:
Atlee-next-film-with-Sharukh-khan

'பிகில்' படத்தை இயக்கியுள்ள அட்லீ பற்றி அவ்வப்போது சர்ச்சையான சில செய்திகளும் வருவது வழக்கம். அவர் இயக்கிய 'தெறி, மெர்சல், பிகில்' ஆகிய படங்களில் அவர் பட்ஜெட்டை அதிகம் இழுத்துவிட்டார் என்று கோலிவுட்டில் குற்றம் சாட்டுவார்கள். அவரது முதல் படமான 'ராஜா ராணி' படத்தை மட்டும் முதல் படம் என்பதால் குறைந்த பட்ஜெட்டில் தான் அவர் அப்போது எடுத்துக் கொடுத்தார்.

சமீப காலத்தில் விஜய்யை வைத்து மூன்று படங்கள் கொடுத்தவர் என்ற பெயர் அட்லீக்கு உண்டு. விஜய் போன்ற மாஸ் ஹீரோக்களை வைத்து படமாக்கும் போது பட்ஜெட் கூடுவது வழக்கம்தான். அட்லீ, விஜய் கூட்டணியில் வெளிவந்த படங்கள் லாபம் கொடுத்ததோ இல்லையோ அது வேறு கதை, ஆனால், அந்த மூன்று படங்களும் விஜய்யின் முக்கியமான படங்களில் ஒன்றாக இடம் பிடித்துவிட்டது.

ஒரு இயக்குனருக்கு அதுதான் தேவை. அதனால்தான் அட்லீ அடுத்து ஷாரூக்கான் நடிக்க உள்ள ஹிந்திப் படத்தை இயக்க உள்ளார் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஐபிஎல் போட்டி நடக்கும் போதே அட்லீ, ஷாரூக் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. மேலும், 'பிகில்' டிரைலர் பற்றி ஷாரூக் டுவீட் செய்துள்ளதும் அட்லீ, ஷாரூக் கூட்டணியை உறுதி செய்வதாக உள்ளது.

ஷங்கரின் உதவியாளர் மற்றும் விஜய்யின் மூன்று முக்கிய படங்களின் இயக்குனர் என்ற பெயர் அட்லீக்கு பாலிவுட்டில் பெரிய விசிட்டிங் கார்டாக அமையும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிரதமர் நமக்கு முன்னுதாரணம்: அஜய் தேவ்கன் பாராட்டுபிரதமர் நமக்கு முன்னுதாரணம்: அஜய் ... சவுதி அரேபியாவில் ஒன்று சேர்ந்து கலக்கிய ஜாம்பவான்கள் சவுதி அரேபியாவில் ஒன்று சேர்ந்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in