Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பிரதமர் நமக்கு முன்னுதாரணம்: அஜய் தேவ்கன் பாராட்டு

16 அக், 2019 - 10:37 IST
எழுத்தின் அளவு:
Ajay-devgan-praises-PM

சென்னை: பிரதமர் மோடி அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார் என பிரபல பாலிவுட் நடிகை அஜய்தேவ்கன் புகழாரம் சூட்டியுள்ளார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் - பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு சில தினங்களுக்கு முன்பு மாமல்லபுரத்தில் நிகழ்ந்தது. அப்போது கடற்கரையில் காலை நடைபயிற்சி சென்ற பிரதமர், அங்கிருந்த குப்பைகளை தானே அகற்றினார். அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. பிரதமர் மோடியின் இந்த செயல் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. அந்த பட்டியலில் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனும் இணைந்துள்ளார்.

இதுகுறித்து டுவீட் செய்துள்ள அவர், "நம் பிரதமர் எப்போதும் முன்னுதாரணமாக திகழ்கிறார். தனது கையாலேயே மாமல்லபுரக் கடற்கரையில் இருந்த குப்பைகளை மோடி அகற்றியது உத்வேகத்தை அளிக்கிறது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்குகளை தவிர்க்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருப்பதை பிரதமர் நினைவுப்படுத்தி இருக்கிறார்", என தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
60 வயது பெண்ணாக டாப்சி60 வயது பெண்ணாக டாப்சி ஷாரூக்கானை இயக்கப் போகும் அட்லீ? ஷாரூக்கானை இயக்கப் போகும் அட்லீ?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in