ஜுன் 2ல் இரண்டு படங்களுக்கே முக்கிய போட்டி | மாவீரன் படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது | யாஷிகா ஆனந்த் - அஜித் மைத்துனர் ரிச்சர்ட் ரிஷி காதலா...? | 37 ஆண்டுகளை நிறைவு செய்த 'விக்ரம்' | பாபா படத்தை தொடர்ந்து மற்றொரு ரஜினி படம் ரீ ரிலீஸ் | கதாநாயகன் ஆகும் பிக்பாஸ் பிரபலம் | மும்பையில் தனுஷ்... மீண்டும் ஒரு பாலிவுட் படம் | த்ரிஷா படத்தில் கெஸ்ட் ரோலில் மூன்று பிரபல ஹீரோக்கள் | நாயகன் படம் போன்று இருக்கும் : கமல் | 150 வயது வரை வாழும் வித்தை எனக்கு தெரியும் : சரத்குமார் |
தெலுங்குத் திரையுலகத்திலிருந்து வெளிவந்த பிரம்மாண்டப் படமான 'சைரா' படம் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வட இந்தியாவிலும் வெளியானது. ஹிந்தியில் சுமார் ரூ.27 கோடிக்கு அந்தப் படம் விற்கப்பட்டதாகத் தெரிகிறது.
நேற்று சில புதிய ஹிந்திப் படங்கள் வெளியானதால் 'சைரா' படத்தின் ஹிந்தி திரையீடு முடிவுக்கு வந்துள்ளது. படம் வெளியான 11 நாட்களில் ஹிந்தியில் மொத்தமாக ரூ.8 கோடி ரூபாய் மட்டுமே அந்தப் படம் வசூலித்துள்ளது. படத்தின் ஹிந்தி உரிமையை வாங்கிய பரான் அக்தார் மற்றும் அனில் தன்டானி ஆகியோருக்கு 20 கோடி ரூபாய் வரை நஷ்டம் வரும் என்று சொல்கிறார்கள்.
படத்தில் சிறப்புத் தோற்றத்தில் அமிதாப் பச்சன் நடித்திருந்தும், அது ஹிந்தி வசூலுக்குப் பெரிய அளவில் உதவாமல் போனது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கில் மட்டும் 100 கோடி வசூலைக் கடந்துள்ள 'சைரா' மற்ற மொழிகளில் நஷ்டத்தைத் தரும் என்பதுதான் இன்றைய நிலைமை.