'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' படத்தின் டீசர் வெளியானது! | 'டிஜே டில்லு 2' படத்தின் ரிலீஸ் தேதி இதோ! | திமுக ஸ்டிக்கர் ஒட்ட பார்க்கும் உதயநிதி: நடிகை கஸ்தூரி கடும் விமர்சனம் | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரபாஸ்! | குடும்பத்துடன் மலேசியாவுக்கு டூர் சென்ற ஐஸ்வர்யா ராஜேஷ்! | இளையராஜாவின் காலில் விழுந்து ஆசி பெற்ற அண்ணாமலை! | சுனைனாவின் ரெஜினா டிரைலர் வெளியானது! | தியேட்டர்களில் அனுமனுக்கு ஒரு 'சீட்' ஒதுக்கீடு: ஆதிபுருஷ் படக்குழு அறிவிப்பு | இந்தியன்-2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா?: ரகசியம் காக்கும் படக்குழு | அஜித்துக்கு வில்லனாகும் அர்ஜூன் தாஸ்? |
பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் சமூக வலைத் தளங்களில் சுறுசுறுப்பாக இயங்குகிறவர். நாட்டு நடப்பு பற்றிய கருத்துக்களை, தனது குடும்ப நிகழ்வுகளை வெளிப்படையாக பகிர்ந்து வருகிறவர். சமீபத்தில் கூட "எனது சொத்துக்களை மகனுக்கும், மகளுக்கும் சமமாக பிரித்துக் கொடுப்பேன்" என்று அறிவித்தார். அவரது கருத்துக்களுக்கு பதில் அளிப்பவர்களில் சிலர் "இவ்வளவு சமூக அக்கறை உள்ள நீங்கள் பெயருக்கு பின்னால் பச்சன் என்ற ஜாதி பெயரை வைத்துக் கொள்ளலாமா?" என்று தொடர்ந்து கேட்டு வருகிறார்கள்.
தற்போது சிரஞ்சீவியுடன் அமிதாப் நடித்துள்ள சைரா நரசிம்ம ரெட்டி படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் புரமோசனுக்காக டி.வி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமிதாப் பச்சன் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
பச்சன் என்பது எனது குடும்ப பெயர். அது எந்த ஒரு மதத்தையும். ஜாதியையும் சார்ந்தது இல்லை. குடும்ப பெயரை எனது பெயரில் வைத்துக் கொண்டதற்காக பெருமைப்படுகிறேன். நான் பள்ளியில் சேர்ந்தபோது எனது தந்தையிடம் குடும்ப பெயர் குறித்து கேட்டனர். அப்போது பச்சன் என்பதை குடும்ப பெயராக வைத்துக் கொள்ள அவர் முடிவு செய்தார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் ஊழியர்கள் எனது வீட்டுக்கு வரும்போது, உங்கள் மதம் என்ன என்று கேள்வி எழுப்புவார்கள். அவர்களிடம் நான் எந்த மதத்தையும் சார்ந்தவன் இல்லை என்று சொல்வேன். நான் ஒரு இந்தியன் என்று தான் கூறுவேன். எப்போதுமே இதைத்தான் சொல்லி வருகிறேன். இப்போதும் அதையே சொல்கிறேன். நான் எந்த மதத்தையும் சேர்ந்தவன் இல்லை.
இவ்வாறு அமிதாப்பச்சன் கூறினார்.