Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

மீண்டும் தயாராகிறது பிரதமர் மோடி படம்

18 செப், 2019 - 19:34 IST
எழுத்தின் அளவு:
Mann-bairagi:-one-more-PM-Modi-film

டீக்கடையில் தனது வாழ்க்கையை ஆரம்பித்து, இன்று நாட்டின் பிரதமராக முன்னேறியிருக்கிறார் நரேந்திர மோடி. அவரது வாழ்க்கை பயணம் பற்றி அறிந்து கொள்கிற ஆர்வம் மக்களுக்கு இருக்கிறது. நரேந்திர மோடியின் பள்ளிக்கால வாழ்க்கையை மையமாக வைத்து ஏற்கெனவே ஒரு சிறப்பு திரைப்படம் வெளிவந்தது. அதன் பிறகு விவேக் ஓபராய், நரேந்திர மோடியாக நடித்த பி.எம்.நரேந்திரமோடி என்ற படம் கடந்த மே மாதம் வெளிவந்தது. இதை ஓமங் குமார் இயக்கி இருந்தார்.

இந்நிலையில் மீண்டும் நரேந்திர மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து இன்னொரு படம் தயாராகிறது. மோடியின் பிறந்த நாளையொட்டி நேற்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த படத்துக்கு 'மன் பைராகி' என்று பெயர் வைத்துள்ளனர். சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கிறார்.

இதுகுறித்து சஞ்சய் லீலா பன்சாலி கூறியதாவது: நரேந்திர மோடியின் வாழ்க்கையில் இதுவரை சொல்லப்படாத சம்பவங்கள் படத்தில் இருக்கும். எல்லோருடைய வாழ்க்கையிலும் பொருந்தக்கூடிய விஷயங்கள் இருக்கும். பிரதமர் நரேந்திர மோடியின் இளமை கால வாழ்க்கையில் நடந்த பல்வேறு சம்பவங்களை தொகுத்து திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளது. இவற்றை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே படமாக்குகிறேன். என்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஹிந்தியில்150 கோடியைக் கடந்த சாஹோஹிந்தியில்150 கோடியைக் கடந்த சாஹோ வயது 44: ரவீனா டாண்டன் பாட்டியானார்! வயது 44: ரவீனா டாண்டன் பாட்டியானார்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in