Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சில்க் ஸ்மிதா டூ சகுந்தலாதேவி: அசத்தும் வித்யாபாலன்

16 செப், 2019 - 10:58 IST
எழுத்தின் அளவு:
Vidayabalan:-Silk-Smitha-to-ShakuntalaDevi.

ஒரு திறமையான நடிகை என்றால் எந்தவிதமான கதாபாத்திரங்களிலும் நடித்துப் பெயர் வாங்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு நடிகையாக இந்தியத் திரையுலகில் தற்போது இருக்கும் ஒரு நடிகை வித்யா பாலன்.

பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் படம் நடிக்க ஒப்பந்தமாகி சில நாட்கள் நடித்த பின் தயாரிப்பாளரால் வேண்டாம் என்று நிராகரிக்கப்பட்டவர். அதன்பிறகு ஹிந்தித் திரையுலகத்திற்குச் சென்று அங்கு பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

தமிழ்த் திரையுலகத்தில் 80களில் கவர்ச்சி நடிகையாக விளங்கிய சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'தி டர்ட்டி பிக்சர்' படத்தில் நடித்தற்குப் பிறகு இன்னும் அதிகமாக கவனிக்கப்பட்டவர். பின் கடந்த 8 ஆண்டுகளில் பல்வேறு விதமான சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.

இப்போது கணித மேதையான 'சகுந்தலா தேவி' பயோபிக்கில் இன்று(செப்.,16) முதல் நடிக்கிறார் வித்யாபாலன். இப்படத்தின் முதல் பார்வை இன்று வெளியிடப்பட்டது. சகுந்தலா தேவியின் நிஜ உருவம் போலவே வித்யாவின் தோற்றமும் படத்தில் இருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. இப்படத்தை அனு மேனன் என்ற பெண் இயக்குனர் இயக்குகிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
துல்கர் படத்திற்கு சச்சின் வாழ்த்துதுல்கர் படத்திற்கு சச்சின் வாழ்த்து ஸ்ரத்தா கபூருக்கு மன அழுத்த பிரச்சினை ஸ்ரத்தா கபூருக்கு மன அழுத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in