Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

என் இளமைக்குக் காரணம் இட்லி, சாம்பார் - அனில் கபூர்

14 செப், 2019 - 12:14 IST
எழுத்தின் அளவு:
Anil-Kapoors-young-secret

இந்திய அளவில் ஒவ்வொரு மாநிலத்திலும் உணவு முறை விதவிதமாக இருக்கும். தென்னிந்திய அளவில் அரிசி வகை உணவுகள் முக்கியத்துவம் பெறும். வட இந்தியாவில் கோதுமை வகை உணவுகள் அதிகமாக உட்கொள்வார்கள். தென்னிந்திய உணவு வகைகளான இட்லி, தோசை, சாம்பார், சட்னிக்கு உலக அளவில் பலரும் அடிமைகள் தான்.

இந்த தென்னிந்திய உணவு வகைகள் தான் தனது இளமைக்குக் காரணம் என்கிறார் ஹிந்தித் திரையுலகின் மூத்த நடிகர், 62 வயது அனில் கபூர். 90களில் அவர் கொடுத்த ஹிட் படங்களுக்கு தென்னிந்தியாவிலும் ரசிகர்கள் உண்டு.

“கடந்த பல வருடங்களாகவே அதிக அளவில் தென்னிந்திய உணவு வகைகளை சாப்பிட்டு வருகிறேன். அவற்றின் மீது எனக்கு தனி காதல் உண்டு. இட்லி, சாம்பார், சட்னி, தோசை, அனைத்து வகை ஊறுகாய்கள், சாதம், ரசம், தயிர் ஆகியவை தான் என்னை இளமையாக வைத்திருக்கும் ரகசியங்கள். ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் வழக்கமாக இட்லி தான் கொடுப்பார்கள். அது தான் பாதுகாப்பான உணவுத் தேர்வு” என்கிறார் அனில் கபூர்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
அனுஷ்காவுக்கு நன்றி: ஆலியா பட்அனுஷ்காவுக்கு நன்றி: ஆலியா பட் துல்கர் படத்திற்கு சச்சின் வாழ்த்து துல்கர் படத்திற்கு சச்சின் வாழ்த்து

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
17 செப், 2019 - 06:25 Report Abuse
skv srinivasankrishnaveni இளமைக்கும் காலம் உண்டு சாரே 40 என்றால் கால் கிழம் 65௦ என்றால் அரைகிளம் 7௦ டு 9௦ முக்கால் கிழம் அதுக்குமேல முழுமுதுமை எப்போதும் ரெடியா இருக்கவேண்டும் 7௦ லெந்து மேலே போறதுக்கு இருக்கும் வரை ஹெல்த்தியாக இருக்கவேண்டும் நோ சுகர் நோ bp இதர வியாதிகள் வராமல் பார்க்கவேண்டும் பாதுக்காக்கவேண்டும் நமது உடலை அதுதான் முக்கியம் . பல கிராமத்தார்கல் ராகி கூழ் களியும் தான் துன்கிறாங்க கர்நாடகாலே நல்ல ஹெல்த்தியாவும் இருக்காங்க ஆனால் அவர்கள் நலம் கெடுப்பது சாராயம் என்ற அரக்கன்தான் காசு இருந்தாலும் குடிப்பாங்க இல்லேன்னாலும் குடிச்சு அழிவாங்க . எவனெல்லாம் இந்தக்குடிக்கு பழகவே இல்லியோ அவன்தான் சிறந்த மனிதன் . நம்பியார் என்ற பாளை பெஸ்ட் ஆக்டர் உண்டு ஐஐயப்பன் பக்தர் பலரையும் குருசாமியா இருந்து சபரிமலைக்கு கூட்டுண்டுபோனார் இ பெஸ்ட் வில்லன் என்றாலும் அவருக்கு மது புகை மாது கிடையாது என்று பலரும் சினி உலகிலேயே சொல்வாங்க . இறுதிவரை அவ்ளோ ஹெல்தியாக இருந்தவர் . இட்லி சாம்பார் சட்னி தோசை என்று துன்னாலை கேவலம் இல்லீங்க அரிசி கார்போஹைட்ரேட் இருக்கு உளுந்துலே ப்ரோட்டீன் இருக்கு மெயின் தேவைகள் உள்ளது குழந்தைமுதல் கிழவா வரை உண்ணும் சிறந்த உணவு தான் இது தென் இந்தியாலே இப்போது உலகம் முழுக்க கிடைக்கும் பெஸ்ட் உணவு பல வெளிநாட்டினர் விரும்பி உண்ணுவதை வெளிநாடு=உகளிலேயும் கண்டு ரசித்துருக்கேன் நம்ம ஹோட்டல் இல்லாத இடம் இல்லே இந்த பூலோகத்திலே என்பது உண்மைதானே
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
16 செப், 2019 - 03:58 Report Abuse
meenakshisundaram தமிழர்களின் கலாச்சாரம் நல்லதே .ஆனால் இந்த மூடத்தமிழர்கள் ஒரு காலத்தில் ஜெமினி Ganesan ,மற்றும் ஹேமமாலினி ஆகியோரை 'இட்லி ,சாம்பார்' என்று பெயர் வைத்தே அளிப்பது நினைவுக்கு வருகிறது,வாழ்க இட்லி,சட்னி,சாம்பார்
Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
15 செப், 2019 - 22:16 Report Abuse
A.George Alphonse பிறந்து சாகும் வரை இதே இட்லி,தோசை சாம்பார்,சட்னி.தயிர்,ரசம் தான் நாம் சாப்பிட்டு வருகிறோம். எங்கே இளமை.இவருக்கு மட்டும் இதனால் என்ன இளமை ஊஞ்சல் ஆடுகிறதோ.
Rate this:
Aathavan - chennai,இந்தியா
15 செப், 2019 - 08:36 Report Abuse
Aathavan athukku kaaranam anni sridevi
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in