Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஒரே ஒரு குத்துப் பாடல்: வாய் பிளக்க வைக்கும் சம்பளம்

24 ஆக, 2019 - 15:05 IST
எழுத்தின் அளவு:
Jacqueline-fernandez-got-high-salary-for-one-song

பாகுபலி படத்துக்குப் பின், அப்படத்தின் நாயகனாக நடித்த நடிகர் பிரபாசின் நடிப்பில் உருவாகி இருக்கும் மிகப் பிரம்மாண்ட படம் சாஹோ. இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக ஷரத்தா கபூர் நடித்திருக்கிறார். அவர்களோடு நீல் நிதின் முகேஷ், ஜாக்கி ஷெராப், மந்திரா பேடி, ஈவ்லின் ஷர்மா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

சுமார் முன்னூறு கோடி ரூபாய் செலவு செய்து எடுக்கப்பட்டிருக்கும் சாஹோ படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை வரும் 30ல் வெளியிட படக் குழு தீர்மானித்து, அதற்கான வேலைகளில் படக் குழுவினர் உள்ளனர். படத்துக்கு யு/ஏ தணிக்கை சான்றும் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், படத்தில் இடம் பெறும் பேட் பாய் என்ற பாடல், சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்தப் பாடலில் பிரபாசுடன் இணைந்து நடனமாடியவர் ஜாக்குலின் பெர்ணாண்டஸ் என்ற நடிகை. இவர் படத்தில் படு கவர்ச்சியாக நடமாடியிருப்பது ஒரு புறம் இருக்க, படத்தில் ஒரு பாடலுக்கு மட்டுமே இவர் நடித்திருக்கிறார். இதற்காக அவர் பெற்ற சம்பளத் தொகை இரண்டு கோடி ரூபாய். இந்தத் தகவல் தற்போது வெளியாகி, பேட் பாய் பாடல், இன்னும் வைரலாகி வருகிறது.

இந்தப் பாடலில் நடிப்பதற்காக, ஜாக்குலின் பெர்ணாண்டஸ் வாங்கி இருக்கும் தொகையை கேட்டு, பலரும் வாய்ப் பிளக்கின்றனர். பிரபல நடிகைகள் பலரும், படம் முழுவதும் நடிக்கக் கூட இவ்வளவு பெரியத் தொகையை சம்பளமாக பெறுவதில்லை.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பிரியங்கா விவகாரம்: பாக்., மூக்கறுப்புபிரியங்கா விவகாரம்: பாக்., ... லண்டன் ரசிகையை நெகிழ வைத்த ரன்வீர்சிங் லண்டன் ரசிகையை நெகிழ வைத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
26 ஆக, 2019 - 06:49 Report Abuse
Natarajan Ramanathan திரைத்துறையில் ஆடையின் அளவு குறைய குறைய கூலியின் அளவு கூடும். ஆனால் இந்த ஜாக்குலின் நேரில் பார்க்க மிகவும் அசிங்கமாக இருப்பார்.
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
25 ஆக, 2019 - 16:05 Report Abuse
Sanny காற்று உள்ளபோதே தூற்றிகொள், சரியாக கடை பிடிக்கிறாங்க. பொறாமை படத்தேவை இல்லை.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in