Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பிரியங்கா விவகாரம்: பாக்., மூக்கறுப்பு

24 ஆக, 2019 - 14:04 IST
எழுத்தின் அளவு:
UN-responds-to-Priyanka-Chopras-Pakistan-row

புதுடில்லி: இந்தியாவுக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் விமானத்தை விரட்டிச் சென்று சுட்டு வீழ்த்திய பிறகு அந்நாட்டு ராணுவத்தினரிடம் சிக்கினார் நமது விமானப்படை வீரர் அபிநந்தன், உலக நாடுகள் கொடுத்த அழுத்தத்திற்குப் பிறகு அபிநந்தன் இந்தியாவுக்கு திரும்ப அனுப்பப்பட்டார்.

அபிநந்தனுக்கு இந்தியாவின் பல் துறை பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்தனர். பாலிவுட் நடிகையும்; ஐ.நா.,வின் நல்லெண்ண தூதருமான நடிகை பிரியங்கா சோப்ரா, அபிநந்தனை வாழ்த்தியதோடு, ஜெய் ஹிந்த் என கருத்து வெளியிட்டிருந்தார்.

இதே போல, காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த 370 சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு திரும்பப் பெற்றதையும் பிரியங்கா சோப்ரா வரவேற்று இருந்தார். இதைத் தொடர்ந்து பாகிஸ்தானியர்கள், பிரியாங்கா சோப்ராவுக்கு எதிராக கொந்தளித்தனர். ஐ.நா.,விடம் முறையிட்டனர். அவரை, ஐ.நா., நல்லெண்ண தூதர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என குரல் எழுப்பினர்.

இதே கருத்தை வலியுறுத்தி, பாகிஸ்தானின் மனித உரிமைக்கான அமைச்சர் ஷெரின் மசாரி, ஐ.நா.,வுக்கு கடிதம் எழுதிதினார். இந்நிலையில், ஐ.நா., சபையின் பொதுச் செயலர் அன்டானியோ குட்டர்சின் செய்தி தொடர்பாளராக இருக்கும் ஸ்டீபன், இரண்டு நிகழ்வுக்கும் சேர்த்து ஐ.நா., சார்பில் பதில் அளித்திருக்கிறார்.

அவர் தெரிவித்திருப்பதாவது: நல்லெண்ண தூதர்களாக இருந்து செயல்படுகிறவர்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்தும்; எண்ணமும் இருக்கும். அதையொட்டித்தான், அவர்கள் கருத்துக் கூற முடியும். ஐ.நா., தொடர்புடைய விஷயங்களில் மட்டும்தான், அவர்கள் நடுநிலையோடு செயல்பட வலியுறுத்த முடியும். அப்படி இல்லாதபட்சத்தில் தான் அவர்களை நீக்க முடியும். பாக்.,- இந்தியா சம்பந்தப்பட்ட விஷயங்களில், இப்படித்தான் செயல்பட வேண்டும் என, தூதர்களை வலியுறுத்த முடியாது. எங்களைப் பொறுத்த வரை, பிரியங்கா பொறுப்பை உணர்ந்து நடுநிலையோடு செயல்படுவதாகவே நம்புகிறோம்.
இவ்வாறு ஸ்டீபன் கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'ராமாயணா' - ராமனாக ஹிருத்திக் ரோஷன் ?'ராமாயணா' - ராமனாக ஹிருத்திக் ரோஷன் ... ஒரே ஒரு குத்துப் பாடல்: வாய் பிளக்க வைக்கும் சம்பளம் ஒரே ஒரு குத்துப் பாடல்: வாய் பிளக்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in