Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஸ்ரீதேவி பங்களா படம் மீது போனிகபூர் நடவடிக்கை

22 ஆக, 2019 - 13:50 IST
எழுத்தின் அளவு:
Boney-Kapoor-to-take-legal-action-against-Sridevi-Bungalow-movie

மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்கிற படத்தில் தனது புருவ சிமிட்டல்கள் மூலம் ஒரேநாளில் பிரபலம் ஆனவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர், இந்திய அளவில் இவர் பிரபலமானதால் இவரது முதல் படம் வெளியானதை தொடர்ந்து இவருக்கு பாலிவுட்டில் பட வாய்ப்புகள் தேடி வந்தன.


அந்தவகையில் மலையாள இயக்குனர் பிரசாந்த் மாம்புள்ளி என்பவர் இயக்கத்தில் இந்தியில் உருவாகியுள்ள ஸ்ரீதேவி பங்களா என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் பிரியா வாரியர்.

இந்த படம் ஆரம்பிக்கப்பட்டு இதன் டைட்டில் அறிவிக்கப்பட்டதில் இருந்தே கடும் சர்ச்சையை சந்தித்து வருகிறது.. காரணம் ஸ்ரீதேவி பங்களா இந்த படம் மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி பற்றியும் மற்றும் அவரது மர்மமான மரணம் பற்றியும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது இதுகுறித்து ஆரம்பத்திலேயே போனிகபூர் படக்குழுவினருக்கு சட்டரீதியான எச்சரிக்கை விடுத்தார் ஆனால் அவர்கள் அதை கண்டுகொள்ளாமல் அடுத்த கட்ட பணிகளில் தீவிரமாக இருக்கின்றனர்.

இந்தநிலையில் இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் போனி கபூரின் சந்தேகத்தை உறுதிப்படுத்தும் விதமாக வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து இந்த படத்தில் நடித்துள்ள இந்தி பிரபலங்கள் பலரிடமும் இந்த படம் குறித்து விசாரித்த போனி கபூர் தற்போது மிகவும் வலுவான சட்டரீதியான நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.. இது சுதந்திர உலகம் என்பதால் அவர்கள் என்ன விரும்புகிறார்களோ அதை படமாக எடுத்து விட்டு போகட்டும்.. ஆனால் ஸ்ரீதேவி என்கிற பெயரை மட்டும் அவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று வழக்கு தொடர்ந்துள்ளார் போனி கபூர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அமீர்கான் படத்தில் விஜய் சேதுபதிஅமீர்கான் படத்தில் விஜய் சேதுபதி ப்ரியங்காவின் நாட்டுப்பற்று: சிக்கல் ஏற்படுத்தும் பாக்., ப்ரியங்காவின் நாட்டுப்பற்று: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in