Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

எனது கல்லீரல் 25 சதவிகிதம் தான் வேலை செய்கிறது: அமிதாப்பச்சன்

20 ஆக, 2019 - 13:48 IST
எழுத்தின் அளவு:
Amitabh-bachchan-says-his-liver-functioning-only-25-percent

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மருத்துவ விழிப்புணர்வு குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, தனது உடல்நிலை குறித்து வெளிப்படையாக பேசினார். அவரது பேச்சின் சுருக்கம் வருமாறு:

நான் மக்களுக்கு மருத்துவ விழிப்புணர்வு ஏற்படுத்த என்னை நானே உதாரணமாக சொல்வேன். வேறு யாரையும் குறிப்பிட மாட்டேன். என் உடல்நிலை குறித்து வெளிப்படையாக பேசுவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. நான் காசநோயிலிருந்து தப்பித்தவன், ஹெபடைடிஸ் பி பிரச்சினையிலிருந்து தப்பித்தவன் என்பதைச் சொல்வதில் எனக்குத் தயக்கமில்லை.

தவறான ரத்தம் கொடுக்கப்பட்டு எனது கல்லீரல் 75 சதவீதம் பாதிக்கப்பட்டுவிட்டது. ஆனால் பாதிப்பான 20 வருடங்கள் கழித்து அது பற்றி என்னால் பரிசோதனையில் தெரிந்துகொள்ள முடிந்ததால் மீதி 25 சதவீதத்தோடு நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். எல்லாவற்றுக்கும் சிகிச்சை உண்டு.

எனக்கு காசநோய் இருந்ததே 8 வருடங்கள் வரை தெரியாது. உடல் ஆரோக்கியத்தில் மிக அதிகமாக கவனம் செலுத்துகிற எனக்கே காச நோய் வந்திருக்கிறது என்றால் இது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். எனவே, பரிசோதனைக்கு நீங்கள் உங்களை உட்படுத்தவில்லை என்றால் உங்களுக்கு எப்போதும் அது பற்றித் தெரிய வராது. அப்படியென்றால் அதற்கான சிகிச்சையும் உங்களுக்குக் கிடைக்காது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
அனுஷ்கா பிகினி போட்டோ, லைக் செய்த விராட் மற்றும் 22 லட்சம் பேர்அனுஷ்கா பிகினி போட்டோ, லைக் செய்த ... 'லட்சுமி பாம்' மீண்டும் ஆரம்பம் 'லட்சுமி பாம்' மீண்டும் ஆரம்பம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
24 ஆக, 2019 - 11:47 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இந்த விளம்பரத்துக்கும் காசு வாங்கியிருப்பார் இந்த நல்லவர்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in