Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

உலகின் அழகான ஆணாக ஹிருத்திக் தேர்வு

18 ஆக, 2019 - 12:43 IST
எழுத்தின் அளவு:
Hrithik-Roshan-on-being-named-world-most-handsome-man

உலகின் மிக அழகான ஆண் நடிகர் யார் என்ற ஓட்டெடுப்பில், உலகப் புகழ் பெற்ற பல ஆண் பிரமுகர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி, இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் முதல் இடத்தை பிடித்திருக்கிறார். இதற்காக, பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம், உலகின் மிக அழகான மனிதரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டியை ஓட்டெடுப்பு மூலம் நடத்தியது. இதில், பல முன்னணி ஹாலிவுட் நடிகர்களையும் போட்டியில் கொண்டு வந்திருந்தது அந்த நிறுவனம். இதில், இந்திய நடிகர் ஹிருத்திக் ரோஷன், மற்றவர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி, முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார்.


இது குறித்து ஹிருத்திக் ரோஷனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:


உலகின் மிக அழகிய ஆணாக என்னை தேர்ந்தெடுத்ததற்காக, எல்லோருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். முகத்தின் அழகை வைத்து அழகான ஆணை தேர்வு செய்கின்றனர். உண்மையில், நல்ல மனிதராக நடந்து கொள்வதும்; நல்ல குணத்தோடும்; மனிதாபிமானத்தோடு இருப்பதுதான், ஒவ்வொருவருக்குமே அழகு. அப்படிப்பட்ட தகுதிகளோடு நான் இருப்பதாகவே உணருகிறேன். எப்போதும் மற்றவர்களுக்கு நல்லவராக தோன்றினால், அதுவே உங்களை அழகானவராக காண்பிக்கும். அதனால், ஒவ்வொருவரும் நல்ல குணத்தோடு இருந்தாலே அழகுதான்.


இவ்வாறு ஹிருத்திக் கூறியிருக்கிறார்.


Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
வசூலை குவிக்கும் மிஷன் மங்கல்: 2 நாளில் 40 கோடி அள்ளியதுவசூலை குவிக்கும் மிஷன் மங்கல்: 2 ... அக்ஷய்குமாரின் பெரும் ஓபனிங் படமாக அமைந்த மிஷன் மங்கள் அக்ஷய்குமாரின் பெரும் ஓபனிங் படமாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

20 ஆக, 2019 - 18:04 Report Abuse
sweetline இதில் என்ன ஆச்சரியம். இந்தியர்களில் ஏமாற்றுவதற்காக இவர்கள் செய்வது. இதனால் இந்தியாவில் mens cosmetics விற்பனை அதிகமாகும்.
Rate this:
19 ஆக, 2019 - 10:42 Report Abuse
ஸாயிப்ரியா அழகான நடிகர். வாழ்த்துக்கள் .ஒரு ரசிகையாக.
Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
18 ஆக, 2019 - 12:56 Report Abuse
A.George Alphonse ஒரு பாரத பிரஜையாக நான் மிக பெருமை படுகிறேன்.வாழ்த்துக்கள் Mr.ஹார்டிக் ரோஷன்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in